For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேஸ்புக்கின் புதிய வெளியீடு.. வருகிறது ''போர்ட்டல்'' சாதனம்.. அமேசானுக்கு போட்டி!

வீடியோ சாட் செய்ய உதவும் ''போர்ட்டல்'' என்ற சாதனம் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் இந்த வாரம் வெளியிட உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: வீடியோ சாட் செய்ய உதவும் ''போர்ட்டல்'' என்ற சாதனம் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் இந்த வாரம் வெளியிட உள்ளது.

இந்த சாதனம் இப்போதே பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது எப்படி இயங்கும் என்ற எதிர்பார்ப்பை உலகம் முழுக்க உருவாக்கி இருக்கிறது.

ஆப் உலகில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன் உலகில் இறங்க மார்க் ஜுக்கர்பெர்க் பல நாட்களாக திட்டமிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது வீடியோ சாட் செய்யும் சாதனம் ஒன்றை வெளியிட உள்ளார்.

முதல் சாதனம்

முதல் சாதனம்

இந்த சாதனம் ''போர்ட்டல்'' என்று அழைக்கப்படுகிறது. பேஸ்புக் நிறுவனம் ஆப் அல்லாமல் வெளியிடும் முதல் சாதனம் இதுதான். ஏற்கனவே தன்னுடைய டேட்டிங் ஆப்பில் வேலை பார்த்து வரும் பேஸ்புக் நிறுவனம் அடுத்தகட்ட அதிரடியாக இதை வெளியிட உள்ளது.

வீடியோ கால் வசதி

வீடியோ கால் வசதி

இது முழுக்க முழுக்க வீடியோ கால் வசதியை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக துல்லியமாக அதிக நேரம் வீடியோ சாட் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இதில் இருக்கும் மிக துல்லியமான கேமராக்கள் வீடியோ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் பேஸ்புக் கூறுகிறது.

வேறு என்னவெல்லாம் செய்யலாம்

வேறு என்னவெல்லாம் செய்யலாம்

அதே சமயம் இதில் இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வீட்டில் உள்ள சாதனங்களை இயக்க முடியும். ஆம், எந்த சாதனத்தில் எல்லாம் வைஃபை வசதி இருக்கிறதோ அதை எல்லாம், இதை வைத்து இயக்க முடியும் என்று கூறுகிறார்கள். அமேசான் ''எகோ'' போலவே இந்த சாதனம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

அமேசான் உதவி

அமேசான் உதவி

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதை உருவாக்க பேஸ்புக் நிறுவனத்திற்கு அமேசான் நிறுவனமே உதவி இருக்கிறது. ஆனால் இது முழுக்க முழுக்க எப்படி இருக்கும் என்ன வசதிகளை கொண்டு இருக்கும் என்று இன்னும் முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை.

English summary
Facebook will release its Portal video chat device soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X