For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஸ்விம்மிங்' பிகினி தெரியும்.. சீனத்து 'பேஸ்கினி' தெரியுமா...?

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனக் கடற்கரைகளில் பெண்கள் 'பேஸ்கினி' எனப்படும் முகமூடியை அணிந்து வருவது பேஷனாகியுள்ளது.

நீச்சலின் போது பெண்கள் அணியும் ஆடைக்குப் பெயர் பிகினி. இந்த நீச்சலுடைகளைத் தயார் செய்யும் அதே துணியால் தற்போது பேஸ்கினி என்ற முகமூடி தயாரிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு வண்ணங்களில் அழகிய வடிவங்களில் இந்த பேஸ்கினிக்கள் விற்கப் படுகின்றன.

வெயிலில் இருந்து பாதுகாக்க...

வெயிலில் இருந்து பாதுகாக்க...

முகம் வெயிலில் கருத்துப் போகாமல் இருப்பதற்கு இந்த முகமூடிகள் பயன்படுகின்றன. இவை இரண்டரை அமெரிக்க டாலர்கள் விலை முதல் சந்தையில் விற்கப்படுகின்றன.

மீன்களிடம் இருந்தும்...

மீன்களிடம் இருந்தும்...

இந்த பேஸ்கினி யு.வி. கதிர்களிலிருந்தும், கடிக்கும் ஜெல்லி மீன்களிடமிருந்தும் முகத்தை காப்பாற்றப் பயன்படுகின்றன.

பேஸ்கினி...

பேஸ்கினி...

சூரிய ஒளிக்கதிர்களால் சருமம் பாதிப்படையாமல் தடுக்க சன் ஸ்க்ரீன்கள் பயன் படுவதில்லை என்ற சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகளால், பேஸ்கினி பக்கம் பெண்களின் கவனம் திரும்பியுள்ளது.

புற்றுநோய் பாதுகாப்பு...

புற்றுநோய் பாதுகாப்பு...

அதோடு, சூரியக் கதிர்களால் வரும் சருமப் புற்றுநோய் பாதிப்பிலிருந்தும் காக்க வல்லது இந்த பேஸ்கினிக்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சீனப்பெண்கள் மட்டும்...

சீனப்பெண்கள் மட்டும்...

இப்போதைக்கு சீனப் பெண்கள் மட்டுமே இந்த பேஸ்கினிகளை அணிந்து வருகின்றனர். ஆனால், உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்களது சருமத்தைப் பாதுகாக்க பேஸ்கினியை உபயோகிக்கும் வெகு தொலைவில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
Whilst you could easily mistake them for bank robbers these are actually women in China who are being hailed as trend-setters for the "Facekini"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X