For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் பயணத்துக்கு தயாரான உலகின் பழமையான ஃபேரி குயின்!

உலகின் பழமையான நீராவி ரயில் என்ஜினான ஃபேரி குயின் மீண்டும் சேவைக்கு வந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் பழமையான நீராவி ரயில் என்ஜினான ஃபேரி குயின் மீண்டும் சேவைக்கு வந்துள்ளது.

உலகின் பழமையான நீராவி ரயில் என்ஜினான ஃபேரி குயின் மீண்டும் பயணத்துக்கு தயாராகியுள்ளது. இந்த ஃபேரி குயின் ரயில் என்ஜின் கடந்த சனிக்கிழமை டெல்லியில் கடந்த சனிக்கிழமையில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

162 ஆண்டுகள் பழமையான இந்த ஃபேரி குயின் என்ஜின் தி ஸ்டீம் எக்ஸ்பிரஸ் என்ற பாரம்பரிய சுற்றுலா ரயிலைமாதத்திற்கு ஒரு முறை இழுத்துசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறை டெல்லியில் இருந்து ரேவரி வழியாக ஆல்வார் வரை இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கன்டோன்மென்ட் டூ ரேவரி

டெல்லி கன்டோன்மென்ட் டூ ரேவரி

டெல்லி கன்டோன்மென்ட்டிலிருந்து ரேவரி வரை அக்டோபர் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ரேஷன் வரும் 2018 ஏப்ரல் மாதம் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு வாய்ப்பு

பார்வையாளர்களுக்கு வாய்ப்பு

தற்போதும் இயங்கி வரும் ரேவரி என்ஜின் நீராவி என்ஜின் அருங்காட்சியகத்தை சென்று பார்க்கும் வாய்ப்பும் பார்வையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக தயாரிக்கப்பட்ட ரயில் என்ஜின்கள் முதல், தற்போதைய என்ஜின்கள் வரை 10 நீராவி என்ஜின்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஐஆர்சிடிசியில் புக்கிங்

ஐஆர்சிடிசியில் புக்கிங்

இதற்காக 3 மணி நேர இடைவேளிக்குப் பிறகு ரேவரியில் இருந்து மாலை 4.15க்கு புறப்படும் ரயில் மாலை 6.15 டெல்லி கன்டோன்மென்டை அடையும் என ரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரயிலில் 60 பயணிகள் பயணிக்கலாம். இதற்கான டிக்கெட் புக்கிங் ஐஆர்சிடிசி, சுற்றுலா மையங்கள் மற்றும் ட்ராவல் ஏஜென்சிகள் மூலம் புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே நடவடிக்கை

இந்தியன் ரயில்வே நடவடிக்கை

நீராவி என்ஜின் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மலைப்பகுதிகளில் நீராவி வண்டிகளை இயக்கவும், உலக பாரம்பரிய இரயில்வேயில் நீராவி நடவடிக்கை மேற்கொள்ளவும், நீராவி என்ஜின்களை மீட்டமைத்தல் போன்ற பல புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஈஸ்ட் இந்தியா கம்பெனி

ஈஸ்ட் இந்தியா கம்பெனி

இங்கிலாந்தில் 1855ஆம் ஆண்டு கிட்ஸன், தாம்ப்ஸன் மற்றும் ஹெவிட்ஸன் ஆகியோரால் இந்த ஃபேரி குயின் தயாரிக்கப்பட்டது. அதே ஆண்டு இந்த ஃபேரி குயின் என்ஜின் கொல்கத்தாவுக்கு கொண்டுவரப்பட்டது. இது 22 நம்பர் என அடையாளம் காணப்பட்டது. ஹவுரா மற்றும் மேற்குவங்கத்தின் ரானிகன்ஜ் இடையே ஈஸ்ட் இந்தியா கம்பெனியால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

1909இல் ஓய்வு பெற்றது

1909இல் ஓய்வு பெற்றது

1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் போது இந்த என்ஜின் பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பீகாருக்கு கட்டுமானப் பணிக்காக அனுப்பப்பட்ட இந்த என்ஜின் கடநத் 1909ஆம் ஆண்டு தனது பணிகளில் இருந்து ஓய்வுபெற்றது.

வாஜ்பாயிடம் விருது

வாஜ்பாயிடம் விருது

1998ஆம் ஆண்டு தற்போதும் இயங்கி வரும் நீராவி என்ஜின் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது இந்த நீராவி என்ஜின். மேலும் அதே ஆண்டு தனித்துவமான மற்றும் வித்தியாசமான சுற்றுலா திட்டத்திற்கான தேசிய சுற்றுலா விருதையும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் பெற்றது இந்த பெருமைக்குரிய ஃபேரி குயின்.

English summary
The "Fairy Queen", the oldest surviving functional steam engine in the world, is once again ready to haul a heritage train from National Capital Delhi from Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X