For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூசிலாந்தில் நடிகைகளின் நிர்வாண போட்டோவை பார்க்கும் ஆசையால் முடங்கிய இன்டர்நெட் சேவை

By Siva
Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: ஹாலிவுட் பிரபலங்களின் நிர்வாண புகைப்படங்களை பார்க்கும் ஆசையில் சில இணையதள லிங்குகளை நியூசிலாந்து மக்கள் கிளிக் செய்ததால் அந்நாட்டில் இன்டர்நெட் சேவை முடங்கியது.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், பாப் பாடகி ரிஹானா உள்ளிட்ட பிரபலங்களின் ஆப்பிள் போன்களை ஹேக் செய்து அதில் இருந்த அவர்களின் நிர்வாண புகைப்படங்களை சிலர் இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும் ஜெனிபர் லாரன்ஸின் போனை ஹேக் செய்தவர் அவரின் மேலும் பல நிர்வாண படங்களை வெளியிடப் போவதாக எச்சரித்தார்.

இந்நிலையில் நியூசிலாந்தில் வாழும் சிலர் பிரபலங்களின் நிர்வாண புகைப்படங்களை பார்க்க இணையதளத்தில் உள்ள சில லிங்குகளை கிளிக் செய்தனர். அந்த லிங்குகளை கிளிக் செய்ததும் கம்ப்யூட்டர்களை முடக்கும் மால்வேர்கள் டவுன்லோடு ஆனது. இதனால் அந்நாட்டில் இன்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டது.

அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கிளிக் செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட இன்டர்நெட் சேவையை மீண்டும் கொண்டு வர டெலிகாம் கார்ப் நிறுவனத்திற்கு 3 நாட்கள் ஆகின. நியூசிலாந்தின் தொலைத்தொடர்பு நிறுவன ஜாம்பவான் டெலிகாம் கார்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என்று தெரியவில்லை என நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சைபர் தாக்குதல் நியூசிலாந்துக்கு வெளியே இருந்து நடத்தப்பட்டுள்ளது.

English summary
Internet service got crippled in New Zealand after some people clicked the fake links to nude celebrities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X