For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகள் காதில் செவி மிஷின்.. மொட்டை போட்டு மிஷின் மாதிரி டாட்டு வரைந்த கிரிக்கெட் வீரர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வெலிங்டன்: மகளுக்கு காதில் மிஷின் பொருத்தப்பட்டுள்ளதால், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் அலிஸ்டர் கேம்பல் தனது தலையை மொட்டையடித்து, மகளின் மிஷின் போலவே டாட்டு வரைத்துள்ளார். இதன்மூலம், மகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராது என்று அவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

கேம்பலின் 6 வயது மகள், கர்லோட்டேவுக்கு 4 வயதாக இருந்தபோது, காது கேளாமை பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமீபத்தில் 2வது அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு காதில் மிஷின் மாட்டப்பட்டுள்ளது. இதனால் மகள் சோகமடைவாளே என்ற ஆதங்கத்தில், அலிஸ்டர் கேம்பல் தனது தலையை மொட்டையடித்து மகளுக்கு மாட்டப்பட்டுள்ள செவி மிஷின்போலவே டாட்டு குத்திக்கொண்டுள்ளார்.

கேம்பலின் தாய்க்கும், மூத்த மகனுக்கும் செவி பிரச்சினை இருந்தது. எனவே, கர்லோட்டேவுக்கு செவி பிரச்சினை ஏற்பட்டதில் கேம்பலுக்கு பெரிய அதிர்ச்சியில்லை. ஆனால், மகளுக்கு அந்த அதிர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு செய்துள்ளார்

English summary
A Taupo dad has gotten a cochlear implant tattooed on his head to help his little girl not feel like the odd one out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X