For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேஸ்புக்கா இது.. சீக்கிரமே "சுடுகாடா" மாறப் போகுதாம்... ஷாக்கடிக்கும் சர்வே

Google Oneindia Tamil News

லண்டன்: பேஸ்புக்கில் நண்பர்கள் லிஸ்ட்டில் உயிருடன் இருப்பவர்களை விட இறந்து போனவர்களின் லிஸ்ட் பெரிதாக இருந்தால் எப்படி இருக்கும். விரைவிலேயே அந்த நிலையையும் நாம் பார்க்கப் போகிறோமாம். இப்படிக் கூறி திகிலடிக்க வைக்கிறது ஒரு சர்வே முடிவு.

உங்கள் வீட்டு முகவரி என்ன என விசாரித்த காலம் போய், பேஸ்புக் ஐடி என்ன, வாட்ஸ் அப் நம்பர் என்ன எனக் கேட்கும் உலகில் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் விர்ச்சுவல் கல்லறைத் தோட்டமாக பேஸ்புக் மாறி விடும் என மிரட்டுகிறது இந்த ஆய்வு. சில ஆண்டுகளில் உயிருடன் இருப்பவர்களை விட இறந்தவர்களிடமிருந்தே அதிக அளவில் நோட்டிபிகேஷன்ஸ் வரும் என மிரட்டுகிறது இந்த ஆய்வு.

அதிகரிக்கும்...

அதிகரிக்கும்...

தற்போது உலகம் முழுவதும் பேஸ்புக்குக்கு 1.5 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். 2098ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும். அதில் பலர் இறந்தவர்களாக இருப்பார்களாம்.

புள்ளிவிவர நிபுணர்...

புள்ளிவிவர நிபுணர்...

இப்படி ஒரு ஷாத் தகவலை ஆய்வு மூலம் வெளியிட்டுள்ளார் மாசசூசட்ஸ் பல்கலைக்கழகத்தசை் சேர்ந்த புள்ளிவிவர நிபுணர் ஹாச்செம் சடிக்கி.

நினைவுப்பக்கம்...

நினைவுப்பக்கம்...

இதற்கு என்ன காரணம் என்றால் இறந்து போனவர்களின் கணக்குகளை நீக்க பேஸ்புக் மறுத்து வருகிறதாம். அதற்குப் பதிலாக அந்தப் பக்கங்களை அவர்களது நினைவுப் பக்கமாக (நினைவில்லம் போல) மாற்றி விடுகிறதாம் பேஸ்புக்.

பேஸ்புக் மறுப்பு...

பேஸ்புக் மறுப்பு...

இதுகுறித்து மாசசூசட்ஸ் ஆய்வுக் குழு கூறுகையில், ‘இறந்து போனவர்களின் கணக்குகளை நீக்க பேஸ்புக் மறுத்து விட்டது. இதனால் பேஸ்புக் அக்கவுண்ட்களின் எண்ணிக்கை குறையாமல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது.

நோட்டிபிகேஷன்கள்...

நோட்டிபிகேஷன்கள்...

இப்படியே போனால் விரைவிலேயே உயிருடன் இருப்பவர்களை விட இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும். அவர்களின் கணக்கிலிருந்து வரும் நோட்டிபிகேஷன்களையும் நாம் பார்க்க நேரிடும்.

கணிப்பு...

கணிப்பு...

உலகம் முழுவதும் இந்த ஆண்டு 9 லட்சத்து 70 ஆயிரம் பேஸ்புக் பயனாளர்கள் மரணிப்பார்கள் என்று டிஜிட்டல் பியான்ட் என்ற பிளாக்கிங் நிறுவனம் கணித்துள்ளது. இது கடந்த 2010ல் 3லட்சத்து 85 ஆயிரத்து 968 ஆக இருந்தது. 2012ல் 5 லட்சத்து 80 ஆயிரமாக இருந்ததாம்.

இறந்தவர்களின் நினைவு வீடியோ...

இறந்தவர்களின் நினைவு வீடியோ...

கடந்த 2015ம் ஆண்டு வரை இறந்து போனவர்களின் "year in review" வீடியோக்களை அனுப்பிவைத்து பலரின் கோபத்தைச் சம்பாதித்தது பேஸ்புக் என்பது நினைவிருக்கலாம். எதிர்ப்புகலைத் தொடர்ந்து அதனை நிறுத்தியது பேஸ்புக்.

என்ன கொடுமை சார் இது...

என்ன கொடுமை சார் இது...

அதை விட கொடுமையாக தற்போது இறந்து போனவர்களின் பிறந்த நாளை நினைவூட்டி நோட்டிபிகேஷனை அனுப்பி வாழ்த்துங்கள் என்றும் கூறி களேபரப்படுத்தி வருகிறது பேஸ்புக் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to researchers, the social networking giant will become the world’s biggest virtual graveyard by the end of this century as there will be more profiles of dead people than of living users.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X