For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4000 வருட பழமையான எகிப்து மண்டையோடு.. பல்லை வைத்து மொத்த வரலாற்றையும் சொன்ன எஃப்.பி.ஐ!

எகிப்து பிரமீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: எகிப்து பிரமீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

இந்த மண்டை ஓடு சரியாக 103 வருடங்களுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 4000 வருடம் பழமையானது என்று கூறப்படுகிறது.

இதை நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். தற்போது இதன் வரலாறு என்ன என்று வியத்தகு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பழையது

பழையது

இந்த மண்டையோடு கடந்த 1915ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த தலை யாருடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த சமாதி ''ஜேஹுடிநாஹ்ட்'' என்ற எகிப்து கவர்னருக்கு சொந்தமானது. இதனால் அவரின் குடும்பத்தை சேர்ந்த யாராவது 4000 வருடங்களுக்கு முன்பு இறந்து போய் இருக்கலாம் அவர்களின் தலையாக இது இருக்கலாம் என்று கருதப்பட்டது.

மோசம்

மோசம்

ஆனால் இதை வைத்து, எந்த விதமான ஆராய்ச்சி செய்தும் கூட தலை யாருடையது என்று கண்டிபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த தலை மோசமாக உடைந்து இருந்தது. சிறு ரத்த செல்கள் கூட இதில் காணப்படவில்லை. இது ஆணா, பெண்ணா என்று கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலனாய்வு அமைப்பு

புலனாய்வு அமைப்பு

இதையடுத்து இந்த மண்டை ஓட்டை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ வாங்கியது. அவர்கள் இதில் கடந்த ஐந்து வருடமாக சோதனை செய்தார்கள். அந்த மண்டை ஓட்டில் இருந்து பல் ஒன்றை எடுத்து அதை பல்வேறு ஆராய்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். இதன் மூலம் நிறைய வரலாற்று தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

100 வருடத்திற்கு பின்

100 வருடத்திற்கு பின்

தற்போது சரியாக 103 வருடத்திற்கு பின் இந்த 4000 வருட மர்மம் வெளியே வந்துள்ளது. இந்த தலை முதலில் ஜேஹுடிநாஹ்டின் மனைவியுடையது என்று கூறப்பட்டது. தற்போது இந்த தலையே கவர்னர் ஜேஹுடிநாஹ்டின் தலைதான் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை வைத்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய இருக்கிறார்கள்.

English summary
FBI finds the history of 4000 years old Egypt skull with new technology. They say that it is the skull of a governor named Djehutynakht.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X