For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9/11 தீவிரவாத தாக்குதல்.. இதுவரை வெளிவராத அதிர்ச்சி படங்களை வெளியிட்டது எப்.பி.ஐ

அல்கொய்தா தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனமாக எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதியன்று அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான அரிய புகைப்படங்களை தற்போது எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் அடையாளமாக திகழ்ந்த இரட்டை கோபுர கட்டடமான உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்களை மோதச் செய்து அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.

பெண்டகன் தாக்குதல்

அதே நாளில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் மீதும் தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு, தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதல் சம்பவங்களில் பல்லாயிரக்கணக்கோனோர் உயிரிழந்தனர்.

மிகப்பெரிய அவமானம்

பெண்டகன் மீது தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்தது. அமெரிக்க ராணுவ தலைமையகம் தாக்கப்பட்டதால், அந்நாடு மிகப்பெரிய அவமானமாக கருதியது.

பின்லேடன் வேட்டை

பின்லேடன் வேட்டை

இந்த தீவிரவாத தாக்குதல்கள் அமெரிக்கா பாதுகாப்பில் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் மீதான பார்வையையும் பிடியையும் அமெரிக்கா இருக்கியது. இந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடனை 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.

தீவிரவாத தாக்குதல் புகைப்படங்கள்

தீவிரவாத தாக்குதல் புகைப்படங்கள்

இரட்டை கோபுர தாக்குதல், பெண்டகன் தாக்குதல் சம்பவம் நடைபெற்று 16 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த நிலையில், பெண்டகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான புதிய புகைப்படங்களை எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.

சிதைந்த கட்டடம்

எப்.பி.ஐ வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சிதைந்த கட்டங்களும், உருகிய வாகனங்களும் உள்ளன. விமானத்தின் சிதைந்த பாகங்களும் பெண்டகன் கட்டடத்திற்குள் சிதைந்து கிடக்கின்றன. இந்த புகைப்படங்களை தற்போது வெளியிடப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்ப் நடவடிக்கை

டிரம்ப் நடவடிக்கை

பயங்கரவாதிகள் மீதான பார்வையையும், பிடியையும் டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் பெண்டகன் தீவிரவாத தாக்குதல் தொடர்பான புகைப்பாடங்களை வெளியிட்டு பயங்கரவாதிகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது எப்.பி.ஐ

English summary
The FBI has released photos from the attack at the Pentagon on September 11, 2001.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X