For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் லேப்டாப் பாம்? எஃப்பிஐ எச்சரிக்கை

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம், விமான நிலைய சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாத லேப்டாப் வெடிகுண்டு இருக்கக்கூடும் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை நம்புவதாக சிஎன்என். தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மத்திய புலனாய்வுத் துறை(FBI) மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், சாதாரண சோதனைக் கருவிகள் உள்ள விமான நிலையங்களில், இத்தகைய நவீன வெடிகுண்டுகள் பிடிபடாமல் தப்பி விடுவதாக கூறியுள்ளனர்.

FBI's warning on ISIS Laptop bomb

அதைத் தொடர்ந்தே மத்திய ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு விமான சேவை உள்ள 10 விமான நிலையங்களில் லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை விமானத்திற்குள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்தில் சோதனைக்கு பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் தீவிரவாதிகள் வசம் கிடைத்துள்ளது, அதை வைத்துக்கொண்டு பல்வேறு சோதனைகள் நடத்தி பாதுகாப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் வெடிகுண்டுகள் தயாரித்து வருவதாக புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்துள்ளதாம்.

தீவிரவாதிகள் பயணிகள் சேவை விமானங்களை தொடர்ந்து குறிவைத்து வருவதாகவும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து புலனாய்வுத் துறைக்கும் கிடைத்துள்ள தகவல் படி அந்த நாட்டு விமான சேவைக்கும் இத்தககைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

2011 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகு, விமான நிலைய சோதனைக் கருவிகள் பல மடங்கு நவீனப்படுத்தப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- இர தினகர்

English summary
US intelligence agencies believe ISIS terrorist groups may have developed laptop bombs which may be passed thru airport security machines. CNN reported first this news. It is learned the recent ban for electronic devices from 10 airports to US, s based on the intelligence reports. Intelligence reports says terrorists’ organization has acquired airport security scanning equipment to test various types of devices which can pass the test of any bombs in electronic devices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X