For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சாட் 3 எபோ இசட்” - இதுதான் உயிர்க்கொல்லி நோயான எபோலாவிற்கு மருந்து!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆப்பிரிக்க நாடுகளை உலுக்கிய உயிர்க்கொல்லி நோயான எபோலாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, சாட், சியாராலோன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு "எபோலா" என்ற உயிர்க்கொல்லி நோய் பரவியது.

FDA-approved drug protects mice from Ebola

இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, அந்த நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்து கண்டுபிடிப்பதில் பல நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது இந்த நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.

அதற்கு "சாட் 3 எபோ இசட்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்தில் அடினோ வைரஸ் என்ற வைரஸ் உள்ளது. இதை மனிதர்கள் உடலில் செலுத்தும் பட்சத்தில் மேலும் நோயை ஏற்படுத்தாது. அதிக அளவில் பெருகாது. மாறாக எபோலா நோயை உருவாக்கும் வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டது.

இந்த மருந்து மாலி, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் பால்டிமோர் ஆகிய இடங்களில் எபோலா நோயாளிகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த மருந்தை மருத்துவமனைகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

English summary
The recent Ebola outbreak in West Africa has claimed more than 11,300 lives and starkly revealed the lack of effective options for treating or preventing the disease. Progress has been made on developing vaccines, but there is still a need for antiviral therapies to protect health care workers and local populations in the event of future outbreaks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X