For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போப்பாண்டவர் வருகைக்கு எதிர்ப்பு.. சர்ச்சுக்குள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய அழகி!

Google Oneindia Tamil News

ஸ்டிராஸ்பர்க், பிரான்ஸ்: போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் ஐரோப்பாவுக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெமன் என்ற அரை நிர்வாணப் போராட்டக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரான்சிஸ்ன் ஸ்டிராஸ்பர்க் நகரில் உள்ள சர்ச்சுக்குள் புகுந்து அரை நிர்வாண கோலத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்சுக்கு வருகிறார் போப்பாண்டவர். இதற்கு பெமன் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பினர் தங்களை "செக்ஸ்ட்ரீமிஸ்ட்ஸ்" என்று அழைத்துக் கொள்கின்றனர்.

FEMEN protest the visit of Pope Francis in EU Parliament

போப்பின் வருகையைக் கண்டித்து ஸ்டிராஸ்பர்க் நகரில் இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் மேலாடை இல்லாமல் சர்ச் ஒன்றில் போராட்டம் நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஸ்டிராஸ்பர்க் நகர சர்ச்சுக்குள் புகுந்த இவர் அங்கு மேலாடை இல்லாமல் மேடை ஒன்றின் மீது ஏறினார். பின்னர் தனது கையில் ஐரோப்பிய யூனியன் கொடியை பிடித்தபடி சிறிது நேரம் கொடியை ஆட்டியபடி இருந்தார். பின்னர் வேகமாக கீழே இறங்கி ஓட்டமும் நடையுமாக வெளியேறி விட்டார்.

மதச்சார்பற்ற ஐரோப்பா தேவை என்ற கோஷத்துடன் இந்த அழகி இப்போராட்டத்தை நடத்தினார். மேலும் போப்பாண்டவர் ஒரு மதச்சார்பான நபர், துரோகி என்று தனது மார்பில் அவர் எழுதியிருந்தார்.

மேலும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் போப்பாண்டவரை பேச அழைத்திருப்பதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இதன் மூலம் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆகியோருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

போப் ஸ்டிராஸ்பர்க் நகருக்கும் வருகை தரவுள்ளார். இதற்கும் பெமன் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைவரும் போப்பை புறக்கணிக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது.

கடவுள் மந்திரவாதி இல்லை, போப்பாண்டவர் அரசியல்வாதி இல்லை என்றும் பெமன் அமைப்பு கூறியுள்ளது.

English summary
A Femen activist bares her breasts in a Strasbourg cathedral to protest against the 'political character' of Pope Francis's visit to the city next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X