இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி தீவில் இருந்து அருகில் உள்ள சிலாயர் தீவுக்கு படகில் 139 பேர் சென்றுள்ளனர். கரையில் இருந்து 300 மீட்டர் தூரம் சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் உள்பட 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
74 பேர் உயிருடன் உள்ளனர். பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிந்திருந்ததால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகியது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமத்ராவில் உள்ள பிரபல ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 160க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடியும் யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்களை தேடும் பணி கைவிடப்பட்ட நாளில் சுலாவெசியில் படகு விபத்து நடந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications