For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபெட்னா 2017: தமிழ்ப்பேரவை விழாவில் கவிஞர் சுகிர்தராணி பங்கேற்கும் கவிதை விழாக்கள்

தமிழ் இலக்கிய உலகில் கவிதைகளால் தனக்கென தனியிடம் பிடித்துள்ள கவிஞர் சுகிர்தராணி வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ம் ஆண்டு தமிழ் விழாவில் பங்கேற்கிறார். 3 நாளும் தொடர்ந்து கவிதைகளை, சுகிர்தராணி

By Devarajan
Google Oneindia Tamil News

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30-ம் ஆண்டு தமிழ் விழா நிகழ்ச்சி மினியாபொலிஸ் நகரில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதில் கவிஞர் சுகிர்தராணி பங்கேற்று கவிதைகள் வழங்கவுள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் சுகிர்தராணி தமது கவி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.

கவிஞர் சுகிர்தராணி , தமிழ் கவிஞரும் எழுத்தாளருமான இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். "கைப்பற்றி என் கனவு கேள்", "இரவு மிருகம்", "அவளை மொழிபெயர்த்தல்", "தீண்டப்படாத முத்தம்" மற்றும் "காமத்திப்பூ" ஆகிய கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, poet Sukirtha rani is going to participate

தற்பொழுது இராணிப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞராகவும் பெண்ணுரிமை, தலித் விடுதலை தளத்தில் சமூக செயல்பாட்டாளராகவும் உள்ள இவருக்கு "சுந்தர ராமசாமி விருது", புதுமைப் பித்தன் நினைவு விருது, பெண்ணிய சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜூன் 30ம் தேதி வரவேற்பு விருந்து கவிதைகளால் தரும் கவிஞர் சுகிர்தராணி, ஜூலை முதல் நாள் கவியரங்கில் கவிதை பொழிகிறார். ஜூலை 3ம் தேதி இலக்கிய கூட்டம் நடக்கிறது. அதில் தமது கவிதை அனுபவங்களை, சுகிர்தராணி இளம் படைப்பாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்கிறார்.

இன்னும் பல திரைப் பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்று தமிழ் பண்பாடுகளை, உலகத் தமிழர்கள் முன்னிலையில் அழகுப்படுத்தி சிறப்புரை வழங்கவுள்ளனர்.

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, poet Sukirtha rani is going to participate at minnesota city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X