For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபெட்னா 2017: நாடக அறிஞர் சங்கரதாஸ் சுவாமிகள் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வடஅமெரிக்க தமிழ்ச் சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30வது தமிழ்ப் பேரவை விழா, நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகள் 150 ஆவது பிறந்தநாள் விழாவாக நடைபெறவுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஆண்டின் தமிழ்ப்பேரவை விழா, மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த விழா நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகள் 150 ஆவது பிறந்தநாள் விழாவாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகத் தமிழுக்கு 20ஆம் நூற்றாண்டில் தலைமையாசிரியர் என போற்றப்பட்டவர் சங்கரதாசு சுவாமிகள்.

FeTNA to celebrate Sankaradas Swamigal 150th birthday

அதனால் இந்த ஆண்டு "தமிழ் விழா - 2017", தமிழ் நாடகத் தலைமையாசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் 1867ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி பிறந்த இவர் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கிய சான்றோர்களுள் குறிப்பிடத்தக்க நாடக அறிஞராக வாழ்ந்தவர். தூத்துக்குடியிலும், பழனியிலும் கல்வி கற்ற இவர் சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள் உள்ளிட்டவைகள் நன்கு கற்றார்.

நாடகத் தொண்டு

சமரச சன்மார்க்க நாடக சபை, பால மீன ரஞ்சனி சபை, தத்துவ மீனலோசனி சபை உள்ளிட்ட பல சபைகளில் இணைந்து நாடகத் தொண்டாற்றினார். இவர் தன் வாழ்நாளில் 68 நாடகங்களை எழுதியுள்ளார். அதில் தற்பொழுது கிடைத்த 16 நாடகங்களுக்கான பனுவல்களே தொகுக்கப்பட்டுள்ளன.

குலேபகாவலி புகழ் சங்கரதாஸ் சுவாமிகள்

குலேபகாவலி, இரணியன், இலங்கா தகனம், நல்ல தங்காள், மணிமேகலை, வள்ளித் திருமணம், லவகுசா உள்ளிட்டவை இவரின் நாடகங்களில் சில. இவரின் நாடகங்கள் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தன், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை உள்ளிட்ட பலவகைப் பாடல்களும் சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்தவையாக இருக்கின்றன.

புதுச்சேரியில் இயற்கை எய்தினார்

பல பத்தாண்டுகளாக தமிழ் நாடகப் பணியில் ஈடுபட்டு வந்த அறிஞர் 13 நவம்பர் 1922 இல் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவரின் நினைவாக மதுரையில் உள்ள தமுக்கம் திடலில் நாடக அரங்கிற்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கரதாசு சுவாமிகளின் 150வது பிறந்தநாள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் நாடக அறிஞரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவாக மினசோட்டா மாகாணத்தில் நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவையின் "தமிழ் விழா - 2017" நடைபெற உள்ளது.

வாருங்கள் தமிழ் நாடகத் தலைமையாசிரியரின் சிறப்பை கொண்டாடுவோம்! தமிழ் நாடகக் கலையை போற்றுவோம்!

English summary
FeTNA 2017 planning for a grand celebration of Sankaradas Swamigal 150th birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X