• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வுஹான் நகர ஆய்வகத்தில் வைரஸ் உற்பத்தியாகிறது.. 40 வருடம் முன்பே சொன்ன மர்ம நாவல்.. பரபரப்பு

|

பீஜிங்: கொரோனா வைரஸ் தீ போல பரவியதில், சீனாவில் மட்டும், 1700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சீன நகரமான வுஹான் இந்த வைரஸின் மையமாக மாறி உள்ளது.

கொரோனா வைரஸ், இப்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பு வுஹான் நகரில் ஆரம்பித்த, வைரஸ் குறித்து, ஒரு புனைக்கதை, நாவல் புத்தகத்தில், தகவல் உள்ளது, உங்களுக்குத் தெரியுமா?

1981ஆம் ஆண்டில் டீன் கூன்ட்ஸ் எழுதிய த்ரில்லர் நாவலான தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ் (The Eyes of Darkness), வுஹான் -400 என்ற வைரஸைக் குறிப்பிட்டுள்ளது. நாவலின் கதைப்படி, அந்த வைரஸ் ஒரு ஆய்வகத்தில் ஆயுதமாக உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக திரும்ப பெறுகிறோம்.. கொரோனாவால் சீனா செய்யும் ''டீமானிடைசேசன்''.. ஷாக் நடவடிக்கை!

மர்ம நாவல்

கொரோனா வைரசும் கூட பயோ போருக்கான முன்னோட்டம் என்ற ஒரு, கருத்தும் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. இந்த நாவலும் அதேபோன்ற ஒரு வைரஸ், ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது போல கூறுகிறது. @DarrenPlymouth என்ற டுவிட்டர் பயனர், இந்த நாவல் வரிகளை, சமூக ஊடகங்களின் வழியாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். புத்தகத்தின் அட்டையை வெளியிட்டு, புத்தகத்தின் ஒரு பகுதியையும், அவர் பகிர்ந்து கொண்டார். அந்த நாவலில் வுஹான் -400 என்ற பெயரில் வைரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரியல் ஆயுதம்

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரியும் புத்தகத்தின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். "கொரானவைரஸ் சீனர்களால் வுஹான் -400 என்று அழைக்கப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதமா? இந்த புத்தகம் 1981 இல் வெளியிடப்பட்டது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது பயோ வாருக்காக தயாரிக்கப்பட்ட கிருமியா என்ற, சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

மர்ம நாவல்களில் சகஜம்

மர்ம நாவல்களில் சகஜம்

ஆனால், நாவல்கள் அதிலும் கிரைம் நாவல்கள், இதுபோன்ற கற்பனைகளை கலந்து இருப்பது இயல்பானதுதான். வுகான் நகரம், சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. தொழில்நகரம் ஆகும். பல சர்வதேச தலைவர்கள், அங்கே சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். பல மாதங்கள் முன்பாக, மாமல்லபுர சந்திப்புக்கு முன்பாக, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கூட அந்த நகரில் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.

முக்கிய வுஹான் நகரம்

முக்கிய வுஹான் நகரம்

எனவே, வுஹான் நகரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நாவலிலும், அந்த நகரம் கற்பனையாக பேசப்பட்டிருக்க கூடும் என்கிறார்கள் சிலர். ஒரு கதை எழுதும்போது, அதுவும் பயோ வார் கிருமி உற்பத்தி செய்யும் நகரம் எனும்போது, அதை பெரிய அல்லது முக்கியத்துவமான நகரில் நடப்பதாகத்தானே கற்பனை செய்ய முடியும் என வினவுகிறார்கள் அவர்கள். எது எப்படியோ, பயோ வார் வைரசாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனைகளும்.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
More than 1700 people have died in China because of the coronavirus outbreak. But a fiction book predicted the Wuhan virus around 40 years ago?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more