For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடல் காஸ்ட்ரோவின் இறுதி அஞ்சலி: உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இன்று இறுதி அஞ்சலி நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹவானா : கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கடந்த 26ஆம் தேதி தனது 90 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இன்று நடைபெறும் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பெரும் புரட்சியாளரான காஸ்ட்ரோ சுமார் 50 ஆண்டுகள் கியூபாவின் அதிபராக ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்.

Fidel castro's ashes will be burried today!

தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார்.

630 முறைக்கு மேல் கொலை முயற்சிகளில் இருந்து அதிர்ஷ்டவமாக தப்பியவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் எதிரியாக இருந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 25 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

காஸ்ட்ரோவின் ஆசைப்படி அன்றே அவரது உடல் எரியூட்டப்பட்டது. இதையடுத்து அவரது அஸ்தி நாடு முழுவதும் கேரவன் மூலம் 900 கிலோ மீட்டர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

காஸ்ட்ரோவின் மறைவுக்கு அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். காஸ்ட்ரோவின் பிரிவால் வாடும் அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அவரது அஸ்தி இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த இறுதி அஞ்சலியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

பிரமாண்ட இறுதி ஊர்வலத்தை தொடர்ந்து சாண்டியாகோ நகரில் உள்ள சான்ட்டா இபிஜெனியா கல்லரையில் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி அடக்கம் செய்யப்படுகிறது.

English summary
Former Cuban President Fidel Castro's ashes to be buried today. Many of the leaders of the world will participate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X