• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் பயணம் நின்று விட்டது.. இப்போதும் எப்போதும் தேவதை .. ஒரு ஈழத்து #96 நினைவுகள்!

|
  உங்களோட '96' அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே!- வீடியோ

  ஹெல்சிங்கி, பின்லாந்து: நமது வாசகர் திவாகரன் பின்லாந்திலிருந்து எழுதியுள்ள 96 பட நினைவுப் பதிவு...

  இன்று 42ஐ கடந்து பயணிக்கிறேன் அதிகமாக இப்போது திரைப்படம் பார்ப்பதில்லை. ஆனாலும் 96 விமர்சனத்தில் ஒரு வார்த்தை படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியது. ரசிகன் எங்காவது ஒரு காட்சியிலாவது தன்னை பொருத்திப்பார்ப்பான் அப்படி ஒரு காட்சி உண்மையிலேயே என்னுடைய காட்சி.

  Finnish Tamil reader shares his memory on movie 96

  ஆம் 1990 களில் ஈழத்தில் வாழ்ந்த பதின்மவயதுகள் பாடசாலை வகுப்புக்கும் சென்றதும் என்னை அறியாமல் கண்கள் தேடும் அவளின் முகத்தை கண்டால் அன்றைய பொழுது நன்றாக இருக்கும் இல்லையோ அன்றைய பொழுது எரிச்சலும் கோபமுமாய் கழியும். ஆசிரியர் எடுக்கும் பாடம் கூட மண்டைக்குள் ஏறாது. ரணமாய் கழியும்.

  96 கதாநாயகி போல் அவளும் நன்றாகவே பாடுவாள். அவள் குரலில் நான் கேட்ட முதல் பாடல் பொன்வீணையே என்னோடு வா. எனக்கு சுத்தமாக பாட்டு வராது என்றாலும் அவளுக்காக 200பக்க கொப்பியில் பாட்டுக்களை எழுதி வைத்திருப்பேன். அந்த கொப்பியை அவளுக்காக வேண்டும் வைத்திருப்பேன். கோயில் திருவிழாக்களில் தூர இருந்து பார்ப்பது ஒரு தனிச்சுகம். இப்படியான நாட்கள் இப்போது நினைத்தாலும் பரவசம் தான்.

  [வாழ்வின் அத்தனை கட்டங்களையும் அனுபவிப்போம், மகிழ்வுடன் அசைபோடுவோம் #96]

  போர்மேகம் சூழ்ந்த அந்தக்காலப் பகுதியில் ஒருநாள் ஊரில் விடுதலைப்போராட்டம் சம்பந்தப்பட்ட கூட்டம் நானும் என் நண்பனும் சென்றோம். அவள் அங்கு வந்தது உண்மையில் எனக்கு தெரியாது. உணர்ச்சி ததும்ப எழுச்சி உரைகள் தாயக மண்ணில் மீட்க இளைஞர் யுவதிகளை அணி திரட்ட போராளி ஒருவர் எழுச்சி உரையாற்ற இரு பெண்கள் மேடையை நோக்கி செல்ல விக்கித்து நின்றேன். அதில் ஒரு பெண் அவள். அவ்வளவுதான். அடுத்த நிமிடமே நான் அவள் பின்னே போராட்டத்திற்கு அன்று ஒன்றாகவே உழவியந்திரத்திதில் பயணப்பட்டு அவர்களை பெண்கள் முகாமில் இறக்கிவிட்டு நாங்கள் வேறு முகாம் சென்றேன்.

  விழுப்புண் அடைந்த நிலையில் என் பயணம் நின்று விட அந்த தேவதை ஈழத்துக்காக தன்னையே கொடுத்து விட்டாள். இப்போதும் எப்போதும் அவள் தேவதை.

  பின்லாந்திலிருந்து

  திவா

  உங்களோட "96" அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே! #96themovie

   
   
   
  English summary
  Our Finnish Tamil reader Thivakaran Navarathinam has shared his memory on movie 96.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more