For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் பெரும் தீ விபத்து.. 119 பேர் பரிதாப சாவு

Google Oneindia Tamil News

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில், ரசாயன பொருட்கள் சேமித்து வைத்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 119 பேர் பலியாகினர்.

விபத்து நடைபெற்றது, சவுக் பஜார் பகுதியிலுள்ள, பல மாடி கட்டடமாகும். பழமையான இந்த பகுதியின் தெருக்கள் குறுகலாக இருக்கும். வீடுகளும் நெருக்கமாக இருக்கும்.

Fire in Bangladesh killed 69

நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதேநேரம், தீயணைப்புத் துறையின் தலைவர் அலி அஹமது இதுபற்றி கூறுகையில், தீ விபத்தால், இறப்பு எண்ணிக்கை உயரும் என்று கூறினார்.

ரசாயன பொருட்கள் சேமித்து வைத்திருந்த குடோன் என்பதால், இந்த தீ விரைவாக பக்கத்து கட்டடங்களுக்கும் பரவின.

Fire in Bangladesh killed 69

சிலிண்டரில் ஏற்பட்ட கசிவிலிருந்தே இந்த தீ உருவாகி உள்ளது. இந்த கட்டடத்தில் ரசாயன குடோனும் இருந்ததால் தீ வேகமாக பரவி உள்ளது. அந்த பகுதியில், கடுமையான, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களும் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Fire in Bangladesh killed 69

டாக்காவிலுள்ள ராணா பிளாசாவில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிட விதிமுறைகளை வங்கதேசத்தினர் பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை என்பதே, இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

English summary
119 dead in fire in a apartments used as chemical warehouses in Bangladesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X