For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 38 பேர் பலி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பிங்டிங் ஷான் நகரில் 100க்கும் மேற்பட்டோருடன் முதியோர் இல்லம் ஒன்று இயங்கி வருகிறது.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்றிரவு அந்த முதியோர் இல்லத்தில் தீப்பிடித்தது. படிப்படியாக தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

Fire In Central China Kills 38, Injures 6

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

English summary
A fire at a rest home in central China killed has 38 people and injured six others, China's official Xinhua News Agency reported. The fire broke out just before 8 p.m. local time Monday in Henan Province.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X