மலேசியாவில் பயங்கரம்.. மதரஸா பள்ளியில் தீ விபத்து - 25 ஆசிரியர்கள், மாணவர்கள் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலி-வீடியோ

கோலாலம்பூர் : மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மதரஸாவில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகினர்.

அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்புத்துறை இயக்குநர் கிருதீன் தர்மான் கூறியுள்ளார்.

Fire kills at least 25 at religious school in Kuala Lumpur

தி தருல் குரான் இட்டிஃபா எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் தீ விபத்து திடீரென ஏற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least 25 people, most of them students, were killed in a fire that broke out early on Thursday morning at a religious school in the Malaysian capital, officials said.
Please Wait while comments are loading...