For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலர்களே மலர்களே.. இது என்ன கனவா... விண்வெளியில் கண் சிமிட்டிய முதல் பூ... !

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்கப்பட்டு வரும் செடியில் முதன்முறையாக பூ ஒன்று மலர்ந்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வகத்தை அமைத்துள்ளன. இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தபடி விண்வெளி வீரர்கள் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்தாண்டு அங்குள்ள ஆய்வுக்கூடத்தில் கீரை விளைவிக்கப்பட்டது.

பூச்செடி...

பூச்செடி...

அதனைத் தொடர்ந்து விண்வெளியில் பூச்செடிகளை வளர்க்கும் முயற்சியில் இறங்கியது நாசா. இதற்கென ஜின்னா எனப்படும் பூச்செடிகளின் விதைகள் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடப்பட்டது.

பூ பூத்தது...

பூ பூத்தது...

செயற்கை வெப்பம் மற்றும் சிரிஞ்சுகள் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு அச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது அழகாக வளர்ந்து வரும் அந்தப் பூச்செடிகளில் எதிர்பார்த்தபடி பூ ஒன்று மலர்ந்துள்ளது.

முதல் மலர்..

முதல் மலர்..

பூமிக்கு வெளியே மலர்ந்த முதல் மலர் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது. ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக காட்சி தருகிறது அம்மலர்.

ஸ்காட் கெல்லி...

அந்த அரிய மலரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் விதவிதமான கோணத்தில் படமெடுத்து பதிவேற்றம் செய்துள்ளார் விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி.

தக்காளிச் செடி...

தக்காளிச் செடி...

இந்த முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, வரும் 2017ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தக்காளிச் செடியை நட்டு பரிசோதனை செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.

கீரை அறுவடை...

கீரை அறுவடை...

பூமிக்கு வெளியே விண்வெளி ஆய்வு மையத்தில் விளைய வைக்கப்பட்ட கீரையையும் முதன்முதலில் சமைக்காமல் ருசி பார்த்தவர் ஸ்காட் கெல்லி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
For the first time in the history an astronaut has achieved success in blooming a flower in the space. American astronaut Scott Kelly, who has been working since March 2015 on the space laboratory took Twitter to announce the news of First ever flower grown in space makes its debut.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X