For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாயமான விமானம்: பணம் கொடுக்கத் துவங்கிய இன்சூரன்ஸ் நிறுவனம்

By Siva
Google Oneindia Tamil News

பெர்லின்: மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக இன்சூரன்ஸ் பணம் வழங்கத் துவங்கவிட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான அலையன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான அலையன்ஸின் சர்வதேச தலைவர் ஹ்யூகோ கிட்ஸ்டன் கூறுகையில்,

First insurance payments made for missing Malaysia jet

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இன்சூரரான நாங்களும் மற்ற துணை இன்சூரன்ஸ் நிறுவனங்களும் முதல் தவணை பணத்தை கொடுத்துள்ளோம். ஒரு விமானம் மாயமானால் என்ன செய்ய வேண்டுமோ அதே போன்று தற்போது பணத்தை கொடுத்துள்ளம் என்றார்.

ஆனால் அலையன்ஸ் நிறுவனம் எவ்வளவு பணம் கொடுத்துள்ளது. அதை யாருக்கு கொடுத்துள்ளது என்ற விவரங்களை தெரிவிக்க ஹ்யூகோ மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கடல் பகுதியில் இரண்டு பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றுக்கும், மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.

English summary
The German insurance company Allianz has revealed that it has made the initial payments in the case of the missing MH 370.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X