For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் முதல் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. அமெரிக்க மருத்துவர்கள் நிகழ்த்திய சாதனை

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உலகிலேயே முதல்முறையாக பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா சாதனை-உலகின் முதல் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

    நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உலகிலேயே முதல்முறையாக பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.

    இந்த சிகிச்சை மூலம் குணமடைந்து இருக்கும் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் தற்போது நல்ல உடல்நலனுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சை மொத்தம் 14 மணி நேரம் நடைபெற்று இருக்கிறது.

    11 பேர் கொண்ட மருத்துவ குழு இந்த அறுவை சிகிச்சையை செய்து இருக்கிறார்கள். இதில் அடிவயிறு பகுதியிலும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    பிரச்சனை

    பிரச்சனை

    அமெரிக்க ராணுவ படையில் பணியாற்றிய அந்த ராணுவ வீரர், ஆப்கானில் இருக்கும் போது, குண்டு வெடிப்பால் காயமடைந்து இருக்கிறார். இதனால் அவரது பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் அவரது அடிவயிறு பகுதியிலும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

    விபத்து

    விபத்து

    ஆனால் பல நாட்களாக, இவரது உடல் அமைப்பிற்கு ஏற்ற உறுப்புகள் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்து மூலம் இறந்த இன்னொரு நபரின் பிறப்புறுப்பு இவருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை 14 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது.

    மொத்தமாக மாற்றினார்கள்

    மொத்தமாக மாற்றினார்கள்

    மொத்தமாக பிறப்புறுப்பு, விதைப்பை, அடிவயிறு ஆகிய பகுதிகள் இந்த சிகிச்சை மூலம் மாற்றப்பட்டு இருக்கிறது. இவரது உடலில் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரத்திற்கு பின் அவர் வீட்டிற்கு செல்லலாம் என்றுள்ளனர். அவர் எப்போதும் போல அவரது இயல்பு வாழ்க்கையை தொடரலாம்.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    ஏற்கனவே இதேபோல் சீனாவில் 2006 பிறப்புறுப்பின் பாதி பகுதி மட்டும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டது. ஆனால் முழுவதுமாக, இப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனையை நிகழ்த்திய மருத்துவர்களை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

    English summary
    First Penis transplant operation is done in the US. 11 doctors jointly done this operation for 14 hours to an Ex American Army man.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X