• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை பாதிக்கும் 5 ஆச்சரிய விஷயங்கள்

By BBC News தமிழ்
|

உடல் பருமன் பிரச்சனையுடன் போராடுவதற்கு அசாத்திய மனோதிடம் தேவை என்பது நம்மில் பலரின் கருத்து. ஆனால் மருத்துவ ஆய்வுகள் வேறு மாதிரியாக கூறுகின்றன. உங்கள் உடல் எடையை பாதிக்கும் ஐந்து விஷயங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

இருவர்
BBC
இருவர்

1) குடல் நுண்ணுயிரிகள்

கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். இதில் ஒருவர் மற்றொருவரை விட கூடுதலாக 41 கிலோ எடை கொண்டவர். பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இவ்விருவரின் உடல் எடையை கடந்த 25 ஆண்டுகளாக கண்காணித்து வருகிறார். பிரிட்டனில் இரட்டையர்கள் குறித்து நடந்து வரும் ஆய்வின் கீழ் அவர் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்விருவரின் எடை வித்தியாசத்திற்கு அவரவர் குடலில் உள்ள மைக்ரோபுகள் எனப்படும் நுண்ணுயிரிகளே காரணம் என்கிறார் ஸ்பெக்டர்.

ஒவ்வொரு முறை நீங்கள் உண்ணும்போதும் உங்களுக்காக மட்டும் உண்பதில்லை. உங்கள் குடலினுள் உள்ள பல லட்சம் கோடி நுண்ணுயிரிகளுக்கும் நீங்கள் உணவளிக்கிறீர்கள் என்கிறார் ஸ்பெக்டர்.

இரட்டையர் இருவரின் மலத்திலிருந்து மிகச்சிறிதளவு மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில் இருவரில் ஒல்லியாக இருக்க கூடிய கில்லியனின் குடலில் பல விதமான நுண்ணுயிரிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் ஜாக்கியின் குடலில் சில வகை நுண்ணுயிரிகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

இதே போன்ற நிலை 5 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது

குடல் நுண்ணுயிரி
Science Photo Library
குடல் நுண்ணுயிரி

பல்வகையான ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அதிகரிக்கும்போது குடலில் பல்வகை நுண்ணுயிரிகளின் அளவும் அதிகரிக்கும்.

பிரிட்டானியர்கள் தற்போது தாங்கள் உண்ணும் நார்ச் சத்து உணவில் பாதியை மட்டுமே உண்ண வேண்டும் என எச்சரிக்கிறார் பேராசிரியர் ஸ்பெக்டர்.

நார்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள்

  • முழு தானியங்கள்
  • பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை சார்ந்த பழங்கள்
  • ப்ரக்கோலி, கேரட் போன்ற காய்கறிகள்
  • பீன்ஸ்
  • பருப்பு வகைகள்
  • பாதாம் போன்ற கொட்டை வகைகள்

2) ஜீன் லாட்டரி

சிலர் விடாமுயற்சியுடன் தினந்தோறும் உடற் பயிற்சிகளை செய்துவந்தாலும் அவர்கள் உடல் பருமன் குறைவதில்லை. ஆனால் சிலர் மிக குறைவான உடற்பயிற்சியிலேயே பருமனை கட்டுக்குள் வைக்கின்றனர்.

நமது உடல் எடை என்பதில் 40 - 70% வரை நமது மரபணு சார்ந்து தீர்மானிக்கப்படுவது என்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். உண்மையில் உடல் பருமன் என்பதை லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் சார்ந்த சமாச்சாரமாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் சதாஃப் ஃபரூக்கி.

உடல் எடையை முடிவு செய்வதில் மரபணுக்களே பெரும் பங்கு வகிக்கின்றன என தெளிவாக தெரிந்துவிட்டது என்கிறார் ஃபரூக்கி. குறிப்பிட்ட சில மரபணுக்களில் நேரும் பிழைகளே உடல் பருமனுக்கு காரணமாகின்றன என்கிறார் அவர்.

ஒருவர் எவ்வளவு என்கிறார்...எவ்வகை உணவை விரும்பி உண்கின்றார் என்பதையெல்லாம் அவரவர் மரபணுக்களே முடிவு செய்கின்றன. உண்ட உணவின் சத்துகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும். மரபணுக்களே முடிவு செய்கின்றன. இரவில் உணவு உண்பது தாமதமானால் உடல் பருமன் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார் மருத்துவர் ஜேம்ஸ் பிரவுன். இரவில் உடல் உழைப்பு குறைவு என்ற பொதுவான கருத்து இருந்தாலும் அது உண்மையல்ல என்கிறார் பிரவுன். உடலுக்குள் உள்ள உயிரியல் கடிகாரம்தான் இதற்கு காரணம் என்கிறார் பிரவுன்.

இரவை விட பகல் நேரத்தில்தான் உணவின் சத்துகளை சிறப்பாக கையாளும் வகையில் நமது உடல் அமைப்பு இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் பிரவுன்.

ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் ஒருவர் பிழையுள்ள MC4R மரபணுவை கொண்டிருக்கின்றன. இந்த மரபணுதான் பசி உணர்வு...உணவு உண்ணும் அளவு உள்ளிட்டவற்றை மூளை வழியாக கட்டுப்படுத்துகின்றன.

எனவே இந்த மரபணுவில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிக பசி ஏற்படுவதுடன் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளையும் உண்ணத் தூண்டுகிறது.

மரபணு பிரச்னையை பொறுத்தவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர் ஃபரூக்கி. ஆனால் உணவுக்கட்டுப்பாடு, உடற் பயிற்சி மூலம் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என அறிய இது உதவும் என்கிறார் ஃபரூக்கி.

3) என்ன நேரம் இது...

காலை உணவை அரசன் போல உண்ணுங்கள்...மதிய உணவை ஒரு முதலாளி போல உண்ணுங்கள்...இரவு உணவை ஒரு பரம ஏழை போல் உண்ணுங்கள் என ஒரு பழமொழி உண்டு. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற அர்த்தம் இதற்கு இல்லை.

உடல் பருமன் பிரச்னை நிபுணரான மருத்துவர் ஜேம்ஸ் பிரவுன், ஒவ்வொரு நாள் இரவும் நாம் தாமதமாக உண்ணும்போது உடல்பருமனுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரவில் நம் செயல்பாடுகள் குறைவென்பதுதான் இதற்கு காரணம் என பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் நமது உடலுக்குள் இயங்கிவரும் கடிகாரம்தான் இதற்கு காரணம் என்கிறார் பிரவுன்.

"இரவு நேரத்தை விட பகல் நேரத்தி்ல் நமது உடலுக்கு உணவின் சத்துக்களை கிரகிக்கும் திறன் அதிகம்" என்கிறார் பிரவுன்.

பிரெட்
Getty Images
பிரெட்

இதன் காரணமாகத்தான் பணி நேரம் மாறிக்கொண்டே இருப்பவர்கள் உடல் எடையை கட்டுப்படுத்த சிரமப்பட வேண்டியுள்ளது என்கிறார் பிரவுன்.

இரவு நேரங்களில் ஜீரணத்திறன் குறைவாக இருப்பதால் கொழுப்பு சத்து மிக்க உணவுகளை மாலை 7 மணிக்கு முன் உண்பது நல்லது. இது உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு உதவும் என்கிறார் மருத்துவர் பிரவுன்.

கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இரவு உணவு நேரம் மாலை ஐந்து மணியிலிருந்து மாலை ஏழு மணிக்கு மெல்ல மாறிவிட்டது...அதனால் உடல் பருமன் பிரச்னையும் அதிகரித்துவிட்டது என்கிறார் பிரவுன்.

தற்கால பணி நேரங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை உடல் பருமன் பிரச்னை அதிகரிக்க காரணமாகின்றன.

காலை உணவை தவிர்ப்பது அல்லது டோஸ்ட் போன்று மிக குறைவாக உட்கொள்வது என்பது கூடவேகூடாது என்கிறார் பிரவுன்.

இதற்கு பதில் புரதம் நிறைந்த சிறிது கொழுப்பும் கொண்ட உணவுகள் அதாவது முட்டை கொண்ட முழு தானிய டோஸ்ட் என்பது சரியான, வெகுநேரத்திற்கு தாங்க கூடிய உணவாக இருக்கும் என்கிறார் பிரவுன். இதே போல மதிய உணவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் இரவு உணவு குறைவாக இருக்க வேண்டுமென்றும் கூறுகிறார் பிரவுன்.

4) உங்கள் மூளையை தந்திரமாக பயன்படுத்துங்கள்...

பிரிட்டன் மக்கள் தாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் அக்கறை குறைவானவர்களாக இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் சத்து கிரகிக்கும் திறன் 30-50% குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மனித நடத்தைகள் குறித்து ஆராயும் அறிவியல் நிபுணர் ஹ்யூகோ ஹார்ப்பர் இதற்கு ஒரு யோசனை தருகிறார். கலோரிகளை கணக்கிட்டுக்கொண்டு இருப்பதற்கு பதில் உணவு உண்ணும் முறையை மாற்ற சில ஆலோசனைகளை இவர் தருகிறார்.

உணவுக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதியை விட ஆர்வத்தை தூண்டக்கூடிய உணவுகளை பார்வைக்கு அப்பால் வைப்பது பலன் தரும் என்கிறார் ஹார்ப்பர்.

நாய்
Getty Images
நாய்

அதாவது ஆரோக்கிய கேட்டை தருகின்ற உணவுகளை சமையலறையிலிருந்து தூக்கிப் போட்டுவிட்டு நலம் தரும் உணவுகளை...பழ வகைகளை வைக்கலாம் என்கிறார் ஹார்ப்பர். டிவி பார்த்துக்கொண்டு முழு பாக்கெட் பிஸ்கெட்டை சாப்பிடுவதற்கு பதில் எவ்வளவு சாப்பிடவேண்டும் என திட்டமிட்டு அவ்வளவு பிஸ்கெட்டுகளை சாப்பிடுவதே சரியாக இருக்கும் என்று ஆரோசனை கூறுகிறார் ஹார்ப்பர்.

விரும்பிய எல்லா உணவுகளையும் விழுங்கிக்கொண்டே இருப்பதற்கு பதில் அதில் எது குறைந்த கலோரி கொண்டது என பார்த்து உண்பது சிறந்தது என்கிறார் ஹார்ப்பர்.

சர்க்கரை அளவு குறைந்த, ஆரோக்கியம் காக்கும் நோக்கிலான மென்பானங்கள் தற்போது சந்தைகளுக்கு வந்துள்ளன... அவற்றை அருந்துவதும் சிறந்தது என்கிறார் ஹார்ப்பர்.

உண்ணும் உணவின் அளவையும் சற்றே குறைத்துக் கொள்ளலாம் என்கிறார் இவர்.

5) ஹார்மோன்கள்

உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு காண தற்போது அறுவை சிகிச்சைகளும் நடக்கின்றன. இவை இரைப்பையின் அளவை மட்டும் குறைப்பதில்லை. அவை உற்பத்தி செய்யும் ஹார்மோனின் அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் எவ்வளவு உண்ண விரும்புகிறோம் என்பதை நமது ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன. இது _Bariatric அறுவை சிகிச்சை மூலம் தெரியவந்தது. இந்த அறுவை சிகிச்சைதான் உடல் பருமன் பிரச்னைக்கு இருப்பதிலேயே சிறந்த தீர்வாக உள்ளது.இது வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை அளித்து பசியை குறைக்கிறது. வயிற்றின் அளவை 90% வரை குறைக்க வேண்டியிருப்பதால் இது பெரிய அறுவை சிகிச்சை ஆகும். ஆனால் இதிலும் சில தடைக்கற்கள் உள்ளன. BMI எனப்படும் உடல் பருமன் - உயரம் விகிதாச்சாரம் குறைந்தது 35க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அறிவை சிகிச்சை செய்யக்கூடியதாகும்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், Baeiatric அறுவை சிகிச்சைக்குப்பின் குடலில் தோன்றும் பசி உணர்வை குறைக்கும் ஹார்மோன்களை வைத்து புதிய அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 3 விதமான ஹார்மோன்களின் கலவையை நோயாளிகளுக்கு ஊசி மூலம் தினசரி ஒரு முறை வீதம் வீதம் 4 வாரங்களுக்கு போட்டு வருகின்றனர்.

இந்த ஊசியை கேட்டுக்கொண்டவர்களுக்கு குறைவான பசி ஏற்படுவதாக கூறுகின்றனர்...இதனால் அவர்கள் 28 நாட்களில் 2 முதல் 8 கிலோ வரை எடை குறைந்துவிட்டனர் என்கிறார் மருத்துவர் ட்ரிஸியா டான்.

இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுவிட்டால் நோயாளிகள் ஆரோக்கியமான எடை அளவை தொடும் வரை அதை தர மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:


BBC Tamil
 
 
 
English summary
People might think battling obesity is down to sheer willpower, but medical research says otherwise. Here are five potentially surprising factors that can affect your weight, as unearthed by The Truth About Obesity .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X