For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய 5 எரிமலைகள்: சாம்பலால் இருண்ட வானம்

By Siva
Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேசியாவில் 5 எரிமலைகள் வெடித்து வானெல்லாம் புகையும், சாம்பலுமாக உள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இருக்கும் மவுண்ட் ரவ்ங் எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலையைச் சுற்றியுள்ள 6 ஆயிரத்து 560 அடிக்கு சாம்பலாக உள்ளது. கடந்த சில நாட்களாக குமுறிய எரிமலை வெடித்துள்ளது.

Five Volcanoes Erupt In Indonesia, Blanketing Skies In Ash

மேலும் மொலுக்காஸ் தீவுகளில் உள்ள கமாலாமா மற்றும் டுகோனோ எரிமலைகள், சுமத்ரா தீவில் உள்ள சினபங் எரிமலை மற்றும் சியாவ் தீவில் உள்ள கரங்கெடாங் எரிமலை ஆகியவை வெடித்து சாம்பலாக கக்கி வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் வானம் இருண்டு, புகைமூட்டமாக உள்ளது. காற்றில் சாம்பல் கலந்து வருகிறது.

எரிமலைகள் வெடித்துள்ளதால் அந்த பகுதிகளில் வசித்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனா காரோ மாவட்டத்தில் உள்ள சினபாங்கில் இருந்து தான் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

130 எரிமலைகள் உள்ள இந்தோனேசியாவில் 5 எரிமலைகள் வெடித்து சாம்பலாக இருப்பது ஒன்றும் புதிதன்று. எரிமலைகள் வெடித்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெம்பர் மற்றும் பான்யுவாங்கி விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேலும் பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.

English summary
Five volcanoes erupted in Indonesia blackening skies in ash and making 13,000 people to leave their houses for safe areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X