For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கியூபாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பலி: 2 பேர் மட்டும் உயிருடன் மீட்பு

கியூபாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹவானா: கியூபாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737-200 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் 40 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இந்த விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 5 பேர் வெளிநாட்டு பயணிகள் ஆவர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில்

புறப்பட்ட சிறிது நேரத்தில்

100 பேர் கியூபாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விவசாயம் செய்யும் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

உடனடியாக மீட்புப்பணிகள்

உடனடியாக மீட்புப்பணிகள்

தீப்பிழம்பு மற்றும் கரும்புகையுடன் விமானம் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பலனின்றி பலி

பலனின்றி பலி

இதில் மூன்று பெண்கள் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் அதிபர்

சம்பவ இடத்தில் அதிபர்

இந்த விமான விபத்தில் 112 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விமான விபத்து நிகழ்ந்த இடத்தை கியூபா அதிபர் மிகுல் டயாஸ் கேனல் நேரில் பார்வையிட்டதாக அந்நாட்டின் கிராண்மா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அரைக்கம்பத்தில் கொடி

அரைக்கம்பத்தில் கொடி

மேலும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மெக்ஸிகோ அதிபர் இரங்கல்

மெக்ஸிகோ அதிபர் இரங்கல்

மெக்ஸிகன் அதிபர் என்ரிக் பெனாவும் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு 68 பேருடன் சென்ற கியூபா உள்நாட்டு விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது. விபத்துக்குள்ளான விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

English summary
Flight crash in Cuba over 100 people dead. Two woman surviving with severe injury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X