For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவை தாக்க தொடங்கியது ஃபுளோரன்ஸ் புயல்.. 14 லட்சம் பேர் வெளியேற்றம்.. அதிர்ச்சி வீடியோக்கள்!

அமெரிக்காவில் தற்போது பல்வேறு நகரங்களில்ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவை தாக்க தொடங்கியது ஃபுளோரன்ஸ் புயல்...அதிர்ச்சி வீடியோக்கள்!

    நியூயார்க்: அமெரிக்காவில் தற்போது பல்வேறு நகரங்களில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி உள்ளது. அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஃபுளோரன்ஸ் புயல் இப்போதுதான் உருவாகி உள்ளது. இது இன்னும் விஸ்வரூபம் எடுக்க இன்னும் 40 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் இப்போதே அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இதனால் பெரிய அளவில் கடல் சீற்றமும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    என்ன வேகத்தில் வீசுகிறது

    இந்த புயல் எதிர்பார்த்த வேகத்தை விட குறைவான வேகத்தில் வீசும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எதிர்பார்த்த நேரத்தை விட அதிக நேரம் வீசும் என்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த ஃபுளோரன்ஸ் புயல் இப்போதே பல இடங்களில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. இது கரையை கடக்கும் போது 225 கிலோ மீட்டர் வேகத்தில் மணிக்கு வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

    தாக்க தொடங்கிவிட்டது

    அமெரிக்காவின் கரோலினா பகுதியில் இந்த புயல் இப்போதே தாக்க தொடங்கிவிட்டது. இன்னும் மற்ற பகுதிகளையும் இது விரைவில் தாக்க உள்ளது. அதேபோல் இந்த புயல் விர்ஜினியா, மேரிலேண்ட், வாஷிங்டன் டிசி, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா ஆகிய பகுதிகளை மோசமாக தாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அங்கு எல்லாம் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடல் சீற்றம்

    இதனால் அங்கு பெரிய அளவில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போதே கரோலினாவில் வெள்ளம் வீடுகளுக்குள் வந்துள்ளது. கடல் அலைகள் சுனாமி அலை போல வர வாய்ப்புள்ளது. தற்போது இந்த அலைகள், நேரடியாக, சாலைகளில் ஓடுகிறது. இதன் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

    வெளியேறினார்கள்

    இதனால் ஏற்கனவே 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது விர்ஜினியா, மேரிலேண்ட், வாஷிங்டன் டிசி, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் 4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இன்று இன்னும் மக்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.

    புகைப்படம் என்ன

    பாதுகாப்பு கருதி இவர்கள் தங்கள் வீடுகளை மரத்தை சுற்றி மறைத்து ஆணி அடித்து பலப்படுத்திவிட்டு செல்கிறார்கள். கரோலினாவில் எல்லா வீடுகளும் இப்படி மரத்தால்தான் மூடப்பட்டு உள்ளது .

    அதிர்ச்சி வீடியோ

    கடல் நீர் உள்ளே வந்தால் எந்த அளவிற்கு தண்ணீர் வரும் என்று வீடியோ வெளியாகி உள்ளது. இதனால்தான் இத்தனை லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Florence Hurricane: The worst Hurricane ever in the history of the USA starts to hit the street.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X