For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதை, இதை எல்லாம் செய்தாலே ஜிக்கா வைரஸ் பாதிப்பை தடுக்கலாம்

By Siva
Google Oneindia Tamil News

ஜெனிவா: ஜிக்கா வைரஸ் தாக்காமல் இருக்க சில எளிய வழிகளை பின்பற்றினாலே போதும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஜிக்கா வைரஸ் தென் அமெரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இருப்பதிலேயே பிரேசிலில் தான் ஏராளமானோர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிக்கா வைரஸ் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவுகின்றது.

கருவில் இருக்கும் குழந்தையை ஜிக்கா வைரஸ் தாக்கினால் அது சிறிய தலையுடன் பிறக்கிறது. இதனால் பெண்கள் சில மாதங்களுக்கு கர்ப்பம் அடைய வேண்டாம் என்று ஜிக்கா வைரஸ் பாதித்துள்ள நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சில எளிய வழிகளை பின்பற்றினாலே போதும் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இல்லாமல் வாழலாம் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஜிக்கா வைரஸ்

ஜிக்கா வைரஸ்

ஏடீஸ் கொசுக்களால் ஜிக்கா வைரஸ் பரவுகிறது. வைரஸ் பாதிப்பு உள்ளவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றினாலும் வைரஸ் பரவும். உடலுறவு மூலமும் வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. வைரஸ் தாக்கினால் லேசான காய்ச்சல், கை, கால் வலி, கண் சிவப்பாகுதல், அரிப்பு ஆகியவை ஏற்படும்.

எப்படி தடுப்பது

எப்படி தடுப்பது

கொசுக்கள் கடிக்காமல் இருந்தால் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருக்காது. கொசுக்கள் கடிப்பதை தவிரக்க கிரீம்கள், கொசுவர்த்திகள் பயன்படுத்துவதுடன், உடல் பாகங்கள் முழுவதையும் மறைக்கும்படி உடை அணிய வேண்டும். படுக்கையில் கொசு வலை பயன்படுத்த வேண்டும். ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் போட வேண்டும்.

சுத்தம்

சுத்தம்

சுத்தான நீரை மூடிய பாத்திரங்களில் வைக்கவும். குப்பைகளை வீட்டில் சேர்த்து வைக்க வேண்டாம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடீஸ் கொசுக்கள் மக்களை பகல் நேரம் மற்றும் மாலை வேளையில் தான் கடிக்கும்.

சிகிச்சை

சிகிச்சை

ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சாதாரண காய்ச்சல், வலிக்கு பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஜிக்கா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

English summary
Unicef has asked people to follow some simple steps to stay away from Zika virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X