For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வசதியே வருகிறதாம் மக்களே!

கியூபாவில் தற்போது மொபைல் மூலம், நேரடியாக இணைய வசதியை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கியூபாவில் மொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்- வீடியோ

    ஹவானா: கியூபாவில் தற்போது மொபைல் மூலம், நேரடியாக இணைய வசதியை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்துவது போல அவர்கள் சிம் கார்ட் நெட்வொர்க் மூலம் நேரடியாக இணையத்தை இனி பயன்படுத்த முடியும்.

    ஆம் கியூபாவில் இப்போது இணையத்தை மொபைல் நெட்வொர்க் மூலம் நேரடியாக பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண்ணை மூடும் வரை எப்போதும் இணையத்தில் 4ஜி ஸ்பீடில் இருக்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம்.

    ஆனால் பல மாற்றங்களில் கண்டிருக்கும் கியூபா இப்போதுதான் முழு இணைய வசதியை பூரணமாக பெற இருக்கிறது. அவர்களின் இந்த மாற்றத்திற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    அமெரிக்காவைவிட வேகவேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்த கியூபா சோவியது யூனியன் உடைத்த சில மாதங்களில் மற்ற லத்தின் அமெரிக்க நாடுகள் போல பெரிய பாதிப்பை சந்தித்தது. ஆனால் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சியை பெற்றாலும், அமெரிக்காவை கெடுபிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருக்கிறது. இதற்கு அமெரிக்கா எவ்வளவு காரணமோ அவ்வளவு கியூபாவும் காரணம்.

    நிலை என்ன

    நிலை என்ன

    தற்போது, அதவாது நேற்று காலை வரை அங்கு 2ஜி நெட்வொர்க் மட்டும்தான் . அதிலும் வீடியோக்கள் பார்க்க முடியாது. நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிகவும் மெதுவாக இருக்கும். முக்கியமாக அந்த நெட்வொர்க்கும், கூட அரசு வழங்கும் பொது வைஃபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். நம்முடைய மொபைல் நெட்டோவொர்க் மூலம் இணையத்தை பயன்படுத்துவதை பற்றி நினைத்து பார்க்கவே முடியாது. வோடபோன் உட்பட உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் அங்கே கிடையாது.

    ஏன் கிடையாது

    ஏன் கிடையாது

    அந்த நாட்டிற்கு தொலைத்தொடர்பு சாதனங்களை விற்க, அமெரிக்கா பெரிய கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. இதனால் அங்கு இணையம் என்பதே ஒரு பெரிய ஆடம்பர கனவு என்பது போலத்தான் இருக்கும். இடிஎஸ்இசிஎ எனப்படும் கியூபா அரசின் அதிகாரப்பூர்வ அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே அங்கு போன் சேவையையும், இணையம் வைஃபை சேவையையும் வழங்கிக் கொண்டு இருக்கிறது. அதுவும் மிக மிக மிக மெதுவான வேகத்தில்.

    இணையம் இருக்கும்

    இணையம் இருக்கும்

    இந்த நிலையில் தற்போது அங்கு மொபைல் நெட்வொர்க் மூலம் இணையம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 ஆண்டுகால இணைய வரலாற்றில் முதல்முறையாக இந்த வசதி அந்த நாட்டிற்கு வருகிறது. அதேபோல் 3ஜி நெட்வொர்க் வசதி மூலம் அங்கு இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கொஞ்சம் அமெரிக்காவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இனி கிடையாது

    இனி கிடையாது

    முன்பு, கியூபாவில் இணையம் பயன்படுத்த வேண்டும் என்றால், கடைகளில் 2 கியூபா டாலர் கொடுத்த ரீசார்ஜ் கார்ட் வாங்க வேண்டும்.அதில் இருக்கும் ரகசிய வைஃபை பாஸ்வேர்டை வைத்து பொது வைஃபையில் இணைந்து நாம் நம்முடைய இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இனி அதேபோல் கார்ட் வாங்கி ரீசார்ஜ் செய்து நாம் இணையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    English summary
    For the first time in Red History, Cuba Starts allows Internet on Mobile Phones with 3G speed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X