For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்சிகோ தொழிற்சாலையை கைவிட்ட ஃபோர்டு... ட்ரம்புக்குக் கிடைத்த இன்னொரு வெற்றி!

By Shankar
Google Oneindia Tamil News

டெட்ராய்ட்(யு.எஸ்): அமெரிக்காவின் முக்கிய கார் நிறுவனமான ஃபோர்டு, மெக்சிகோவில் தொடங்க இருந்த புதிய தொழிற்சாலைத் திட்டத்தை கைவிட்டது.

அதற்குப் பதிலாக 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்க உள்ளனர். இதன் மூலம் 700 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளது.

Ford cancels its Mexican new plant

எங்களின் இந்த நடவடிக்கை மூலம் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொழிற்கொள்கை மீது நாங்கள் 'நம்பிக்கைத் தீர்மானம்' கொண்டு வந்துள்ளோம் என்று ஃபோர்டு நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஃபீல்ட்ஸ்,குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் வருமான வரி சீர்திருத்தம், தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டம் தங்களை கவர்ந்துள்ளதாகவும் அதனால் அமெரிக்காவிலேயே புதிய மூதலீடுகளை செய்து புதிய தொழிற்சாலையை தொடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய தொழிற்சாலை மின்சாரம் மூலம் இயங்கும் கார் உற்பத்திக்காக வடிவமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் மீது வேலைகளை வெளி நாட்டுக்கு அனுப்புவதாக ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீது 35 சதவீதம் வரி விதிக்கப்போவதாகவும் ட்ரம்ப் கூறி இருந்தார்.

இந்த திடீர் திருப்பம், ஃபோர்டு நிறுவனத்தின் பின்வாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மெக்சிகோவிலிருந்து வரும் கார்களுக்கு அரசு 35 சதவீதம் வரி விதித்தால், உற்பத்தி செலவில் கிடைக்கும் லாபத்தை விட, அடக்கவிலை அதிகமாகிவிடும். மேலும் அரசுடன் மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்படும்.

Ford cancels its Mexican new plant

அதை விட உள் நாட்டிலேயே தொழிற்சாலை தொடங்கி அரசிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கு.

அமெரிக்காவில் மட்டும் ஃபோர்டு நிறுவனத்தில் 85 ஆயிரம் பேர்கள் வேலை செய்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோவில் 8800 பேர் வேலை பார்க்கின்றனர்.

முன்னதாக கேரியர் நிறுவனத்தை மெக்சிகோ செல்லவிடாமல் ட்ரம்ப் தடுத்தார் . அடுத்ததாக ஸ்பிரிண்ட் தொலைத் தொடர்பு நிறுவனம் 5000 வேலைகளை அமெரிக்காவுக்கு திரும்பக் கொண்டு வருவதாக அறிவித்தது.

தற்போது ஃபோர்டு நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு ட்ரம்பின் தொழிற்கொள்கைகளுக்கு அடுத்தடுத்து கிடைத்து வரும் வெற்றியாக கருதப்படுகிறது. முறைப்படி அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே 'மேக் இன் அமெரிக்கா' வை செயல்படுத்த வைத்து விட்டாரே!

போகிற போக்கைப் பார்த்தால் ஆப்பிள் நிறுவனமும் சீனாவிலிருந்து ஐ போன் தொழிற்சாலையை அமெரிக்காவுக்கு மாற்றுமோ?

-இர தினகர்

English summary
Ford Motors cancelled their proposed plan to open a new facility in Mexico. Instead they are investing 700 million US dollars in Michigan State itself. The new facility will be used for manufacturing electric cars and expected to create 700 new jobs. CEO Mark Fields told, the company has made this decision as Vote of Confidence for president elect Donald Trump’s new policies and corporate tax cut. It is recollected that Trump bashed Ford for transporting jobs to overseas and he had also warned to slap 35% import duty on cars manufactured in Mexico. Currently Ford has employed 85000 employees in US and 8800 in Mexico.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X