For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்.. இந்தியா தான் காரணம்… கைகாட்டும் பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    போர் அறிவிப்பு வருமா?.. அதிரடிக்கு தயாராகும் இந்தியா !- வீடியோ

    இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பதவி ஏற்றதில் இருந்து அமைதிக்கான நடவடிக்கையில் இறங்கினார். ஆனால் அதுக்கு நேர்மாறாக.. புல்வாமா தாக்குதல் அரங்கேற பாகிஸ்தானுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    Foreign ministrys website hacked, pakistan blames india

    இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், பாகிஸ்தானில் இருந்து இந்த இணையதளம் எந்த பிரச்னையும் இன்றி இயங்கி வருகிறது.

    ஆனால் ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து வருபவர்கள், தங்களால் இணையதளத்தை பார்க்க முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய ஹேக்கர்கள் இதனை செய்திருக்கலாம். இது இந்தியாவின் சைபர் தாக்குதல் என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    English summary
    The official website of Pakistan's Ministry of Foreign Affairs was reportedly hacked.The foreign ministry spokesperson Mohammad Faisal said complaints were received about the site being inaccessible by users from several countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X