For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்திற்காக அரசியலில் இருந்து ஓய்வு: ஆஸி. முன்னாள் பிரதமர் கெவின்ரூத் திடீர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Kevin Rudd
சிட்னி: தொழிற்சங்க கட்சியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் கெவின் ருத் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இரண்டு முறை ஆஸ்திரேலியாவின் பிரதமராகவும், ஜூலியா கில்லார்டின் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் லிபரல் கட்சியைச் சேர்ந்த டோனி அபோட்டால் கெவின் ரூத் (55). இவர் ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மோசமானத் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், நேற்று மாலை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு உணர்ச்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார் கெவின் ருத். அதில், குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்த பின்னரே, அரசியலில் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது, "இது எளிதாக எடுத்த முடிவல்ல. குடும்பத்தினரின் முக்கியத்துவத்திற்காக அரசியலில் இருந்து விலக எண்ணிணேன். இந்த வாரத்துடன் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் " என்றார்.

முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்டை தேர்தலுக்கு முன் உட்கட்சித் தேர்தலில் தோற்கடித்து கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் கடுமையான மோதல்களை சமாளித்து, பிரதமர் பதவியை கைப்பற்றிய ருத், அதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியிடம் பெரும் தோல்வியை சந்தித்தார். இது அவரது செல்வாக்கைக் குறைக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்களே வற்புறுத்தியதால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தெரிகிறது.

English summary
Kevin Rudd, who twice won and lost the leadership of Australia's government during the past six years, is quitting politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X