For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி மாதிரி அரசியலுக்கு வருவேன்னு கூறி குழப்ப மாட்டேன்.. க்ளீன் போல்டாக்கிய முத்தையா முரளிதரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி மாதிரி அரசியலுக்கு வருவேன்னு கூறி குழப்ப மாட்டேன் - முரளிதரன்-வீடியோ

    ஹட்டன்: ரஜினிகாந்த் போல அரசியலுக்கு வருவேன்... மாட்டேன்.. என்று சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன்... எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை என்று இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்து கிட்டத்தட்ட வந்து கொண்டிருக்கிறார். அவர் அறிவித்து ஓராண்டு ஆகிய நிலையில் பராக்.. பராக் என்று சொல்லிக்கொண்டு பேட்டபடமும் வெளியாக உள்ளது. ரசிகர்களும் படத்தை எதிர்கொள்ள தயாராகி விட்டனர்.

    தயாரிப்பு நிறுவனமும் படத்தை பிரபலப்படுத்துவதில் மும்முரமாகி உள்ளது. திரையரங்குகளில் வரவேற்பு, கொடி, தோரணங்கள் என அமர்க்களப்படுத்த தயாராகிவிட்டனர். ஆனால் இந்த தருணத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரஜினியின் அரசியல் எப்போது?

    நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தையும், அவரது அரசியல் நிலைப்பாடு குறித்தும் தான் அவர் கூறியுள்ளார். செய்தியாளர்கள் முரளிதரன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துதான் சர்ச்சையாகி கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது.

    நிகழ்ச்சியில் முரளிதரன் பேச்சு

    நிகழ்ச்சியில் முரளிதரன் பேச்சு

    இலங்கையின் ஹட்டன் மண்டல கல்வி அலுவலகம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசியதாவது:தோட்டத் தொழிலாளர்களின் தினசரி அடிப்படை ஊதியம் ரூ. 1,000-ஆக இருக்க வேண்டும் என்பதால் தற்போதைய சம்பளம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. தொழிலாளர்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.

    சம்பளத்தை உயர்த்த வேண்டும்

    சம்பளத்தை உயர்த்த வேண்டும்

    ரூ. 20,000 வைத்து ஒரு குடும்பத்தை இன்றைய காலக்கட்டத்தில் நம்மால் வாழ்வது கடினம். கணவன் மனைவி இருவரும் பணிக்கு சென்றால் மட்டுமே ஒரு குடும்பத்தை நடத்த முடியும். அனைவருக்கும் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

    ரஜினி போன்று குழப்பமில்லை

    ரஜினி போன்று குழப்பமில்லை

    நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் முரளிதரன் கூறியதாவது:தொழிலாளர்களின் ஊதியம் பற்றி பேசினால் நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்கிறார்கள். ரஜினிகாந்த் இந்தியாவில் கூறுவது போல வருவேன் வரமாட்டேன் என்று குழப்பத்தில் நான் இல்லை. நான் அரசியலுக்கு வரவே மாட்டேன்.

    சேவை பிடித்திருக்கிறது

    சேவை பிடித்திருக்கிறது

    நான் செய்வது அரசியல் இல்லை. சேவை தான் செய்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது. மக்களுடைய தேவைகளை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்" என்று முரளிதரன் கூறினார்.

    English summary
    Muttiah Muralitharan is a former Sri Lankan cricketer said, I won’t drag like Rajinikanth in India who says coming, not coming, coming , not coming in politics. My only answer is that I am not interested and would not participate in politics”.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X