For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூகுள் எல்லவாற்றையும் காப்பி அடிக்கிறது.. மக்களை வதைக்கிறது.. போட்டு உடைக்கும் முன்னாள் ஊழியர்!

கூகுளில் இருந்து வெளியேறிய முன்னாள் ஊழியர் ஒருவர் அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: இணையத்தில் தற்போது கூகுள் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறது. தன்னுடன் போட்டியிட்ட பிங், யாஹூ போன்ற சர்ச் எஞ்சின்களை எல்லாம் மொத்தமாக இல்லாமல் ஆக்கிவிட்டது.

இந்த நிலையில் கூகுளுக்கு உண்மையான பிரச்சனை உள்ளே இருந்து தொடங்கி இருக்கிறது. கூகுளில் 13 வருடமாக வேலை பார்த்த 'ஸ்டீவ் எக்' இரண்டு வாரம் முன்பு வேலையை விட்டு சென்றார்.

தற்போது அவர் கூகுள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். கூகுள் இன்னும் சில காலத்தில் அழிந்துவிடும் என்று கூறியுள்ளார். அதற்கு 4 காரணத்தையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறது.

காரணம் 1

காரணம் 1

பயம்தான் முதல் காரணம் என்று கூறியுள்ளார். கூகுள் இதுவரை வெளியிட்டு இருக்கும் கண்டுபிடிப்புகள் சொதப்பாமல், தோல்வி அடையாமல் இருக்க வேண்டும் என்றே அந்த நிறுவனம் பயப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்திற்கு புதிய கண்டுபிடிப்புகள் குறித்து சிந்திக்க நேரம் இல்லை என்றுள்ளார்.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

பெரிய நிறுவனங்களில் இல்லாத அளவிற்கு இங்கு அரசியல் இருக்கிறது என்று கூறியுள்ளார். அரசியல் பார்வை ரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றுள்ளார். ஏற்கனவே அங்கு நிறப்பாகுபாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது.

மூன்றாவது காரணம்

மூன்றாவது காரணம்

கூகுள் பணியாளர்களை மோசமாக நடத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறார். எல்லா பணியாளர்களும் நல்லவர்களாக இருந்தாலும் தலைமையில் இருக்கும் நபர்கள் மிகவும் மோசமானவர்களாக இருக்கிறார்கள். இதனால் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ளார்.

காரணம் 4

காரணம் 4

இதுதான் மிக முக்கிய காரணம் என்றுள்ளார். கூகுள் சமீப காலங்களில் அதிகம் காப்பி அடிப்பதாக கூறியுள்ளார். எதையுமே சுயமாக கூகுள் யோசிப்பது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் கூகுளின் பழைய தனித்தன்மை போய்விட்டது. இன்னும் சில வருடத்தில் கூகுள் அழிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

English summary
Former employee Patently Apple says Google isn't innovative anymore. He gave 4 reasons for his claim. He says that google copying everything in recent times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X