For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் பெண் பத்திரிகையாளர் மேனா மங்கல் சுட்டு கொலை.. ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் பிரபல முன்னாள் பெண் பத்திரிகையாளரும், அந்நாட்டின் கலாச்சார ஆலோசகராக இருந்தவருமான மேனா மங்கல் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் கிழக்குப்பகுதியில் மேனா மங்கல் வசித்து வந்தார். பத்திரிகையாளர் பணியில் இருந்த அவர் இறப்பதற்கு முன் பிரபல ஊடகம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் கலாச்சார ஆலோசகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

Former female journalist Mena Mangal shot dead .. shocking incident in Afghanistan

பட்டப்பகலில் மேனா மங்கல் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மர்ம நபர்கள், மேனா மங்கலை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், என்ன காரணத்திற்காக அவர் சுடப்பட்டார் என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு போலீஸார் கூறியுள்ளனர்.

அரசியல் செய்ய ஒன்றும் இல்லை... நல்லகண்ணு விவகாரத்தில் சரத்குமார் கருத்து அரசியல் செய்ய ஒன்றும் இல்லை... நல்லகண்ணு விவகாரத்தில் சரத்குமார் கருத்து

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மேனா மங்கல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பதிவிட்டிருந்தாரென்று அந்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் பெண் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வஸ்மா ப்ரோக் கூறியுள்ளார்.

English summary
Mena Mangal a former female journalist and cultural adviser to the country, was shot dead in Afghanistan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X