For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் - மரணப்படுக்கையில் மனம் திறந்த மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஒப்புதல்!

இளவரசி டயானா உள்பட 23 பேரை கொலை செய்த போது பிரிட்டிஷ் உளவுத் துறையில் பணியாற்றியதாக முன்னாள் மை5 ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் கூறியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

லண்டன் : நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தன்னுடைய உயிர் பிரியாது என்று பிரிட்டிஷ் உளவு அமைப்பின் முன்னாள் ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயம் சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டயானா அந்த அளவிற்கு அழகுப் பதுமையாக இருந்தார். இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

சார்லஸ் உடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக டயானா அறிவித்ததோடு விவாகரத்து செய்யவும் முடிவு செய்ததாகவும் ராஜ குடும்பத்திற்கு ஆதாரத்துடன் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா உயிரிழந்தார். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படு கொலை என சர்ச்சை எழுந்தது.

மனம் திறந்த ஏஜென்ட்

மனம் திறந்த ஏஜென்ட்

20 ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருக்கும் இந்த மரணம் குறித்து பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பில் பணியாற்றிய ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் மனம் திறந்துள்ளார். மரணப் படுக்கையில் உள்ள அவர் டயானா மரணம் உள்பட 1973ம் ஆண்டு முதல் 1999 வரை இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 23 கொலைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

டயானா மிகவும் அழகான பெண் என்பதோடு, இளகிய மனம் படைத்தவர். ஆனால் அவர் இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்ய முடிவு செய்தது அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் டயானா அரசு குடும்ப ரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தார்.

தீர்த்துக்கட்ட உத்தரவு

தீர்த்துக்கட்ட உத்தரவு

இதனால் அவரைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது, அதிலும் குறிப்பாக இளவரசர் பிலிப்பே இந்த உத்தரவை பிறப்பித்தார். இதனை எனது பிரிவின் தலைவர் என்னிடம் கூறி டயானாவை கொல்ல வேண்டும், ஆனால் அது விபத்து போல இருக்க வேண்டும் என உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

அரச குடும்பத்திற்காக கொன்றேன்

அரச குடும்பத்திற்காக கொன்றேன்

அந்த உத்தரவை ஏற்றே, நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஜான் கூறியுள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும், தான் கொன்ற ஒரே பெண் அதவும் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் டயானா தான் என்றும் ஜான் ஒப்புக் கொண்டுள்ளார்.

கடைசி ஆதாரமான ஏஜென்ட்

கடைசி ஆதாரமான ஏஜென்ட்

டயானாவைக் கொன்றதைக் கண்டுபிடிப்பது முடியாத காரணம் என்றும் ஒரு சில ஆதாரங்கள் மட்டுமே உள்ளது. மேலும் இந்த விவகாரம் தெரிந்த ஏஜென்ட்டுகள் பலர் உயிரிழந்துவிட்ட நிலையில், தான் மட்டுமே தற்போது உயிரோடு இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜான்.

மரணப்படுக்கையில் ஒப்புதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஜான் மரணப்படுக்கையில் உள்ளார். கடைசி நேரத்திலாவது உண்மையைச் சொன்னால் தான் என்னுடைய உயிர் போகும் என்பதாலேயே டயானா கொலை மர்மங்களை உடைப்பதாகவும் ஜான் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். டயனாவின் மர்ம மரணம் பற்றி உளவுத்துறையில் பணியாற்றிய ஏஜென்ட் இப்போது வாய் திறந்துள்ளது அரச குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Former British agent confessed that he only killed Diana in respect to the direct order from British Prince family particularly from Prince Philip
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X