For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூஸி.முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்! இந்தியாவில் தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்டவர்

Google Oneindia Tamil News

ஆக்லாந்து: இந்தியாவிற்கு 1955ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்ட நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மாட் பூர் 90 வயதில் வயது மூப்பு காரணமான உடல் நலக்குறைவால் காலமானார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 1953-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் மாட் பூரே. இந்தியாவிற்கு 1955-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி இந்தியா வந்தது.

அந்த அணி சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

100 வயது.. உலகின் மிக வயதான இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்.. பிராட்மேனுக்கு நெருக்கம்

பெங்களுரு டெஸ்ட்

பெங்களுரு டெஸ்ட்

பெங்களூருவில் நியூசிலாந்து அணி பந்து வீசி பில்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் ஒரு தெரு நாய் ஓடிவந்துவிட்டது. இந்ந்நிலையில் நாய்களின் மீது அளவற்ற பாசம் கொண்ட ஆல்ரவுண்டரான கிரிக்கெட் வீரர் மாட் பூரே. அந்த நாயை பாசத்துடன் பிடிப்பதற்காக ஓடினார். ஆனால் அந்த நாய் தன்னை தாக்க வருகிறார் என நினைத்து தப்பி ஓடியது. ஆனால் அதிவேகமாக ஓடிய மாட் பூரே நாயை பிடித்துவிட்டார்.

ரேபிஸ் நோய்

ரேபிஸ் நோய்

அப்போது எதிர்பாராதவிதமாக நாய் கிரிக்கெட் வீரர் மாட் பூரேவை கடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டுது. இதனிடையே அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது அடுத்த சில நாட்களில் தெரிய வந்தது. இதனால் கிரிக்கெட் வீரர் மாட் பூரேவுக்க 12 தடுப்பூசிகள் அடுத்த நாளில் வயிற்றில் போடப்பட்டது.

100 கிமீ பயணத்து ஊசி

100 கிமீ பயணத்து ஊசி

இது தொடர்பாக அவரது மகன் ரிச்சர்ட் கூறுகையில், எனது தந்தைக்கு இந்திய சுற்றுப்பயணத்தின் போது நாய் கடியால் இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்டிபயாடிக் ஊசி தேவைப்ட்டது. ஒரு சில நாளில் மருத்துவர்கள் உடன் இல்லாததால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஊசி போட்டுக்கொண்டார்.

உடல் நலக்குறைவால் மரணம்

உடல் நலக்குறைவால் மரணம்

என்னுடைய முழு குடும்பமும் நாய்கள் மீது அளவற்ற பாசம் கொண்டது. அப்பா வழக்கமாக நாய்களை தழுவுவார். அப்படித்தான் அந்த நாயை தூக்க முயன்றார். ஆனால் அது கடித்துவிட்டது. இதனால் 12 நாளில் 12 தடுப்பூசி போட்டார்" என்றார். இந்நிலையில் ஆல் ரவுண்டரான மாட்பூரே வயது மூப்பு உடல் நலக்குறைவால் 90வயதில் காலமானார்.

English summary
Former New Zealand cricketer Matt Poor who is remembered for catching a stray dog during a match in Bangalore in 1955 and subsequently taking 12 anti-rabies injection has died at the age of 90
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X