For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆமாம் 100 நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றேன்.. அதுக்கு என்ன இப்ப.. நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம்

Google Oneindia Tamil News

ஜெர்மனி: ஜெர்மனியில் நோயாளிகளுக்கு அதிக வீரியம் கொண்ட விஷ ஊசியை போட்டு 100 பேரை கொன்ற விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆண் நர்ஸ் உண்மையை ஒப்புக் கொண்டார்.

ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகொல் (41). இவர் ஒரு ஆண் செவிலியர். ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அதிக வீரியம் கொண்ட விஷ ஊசியை போட்டபோது கையும் களவுமாக சிக்கினார்.

ஊசி

ஊசி

இதையடுத்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மருத்துவமனையில் 2000-2005-ஆம் ஆண்டு வரை 65 நோயாளிகளும் ஓல்டன்பர்க் மருத்துவமனையில் 35 நோயாளிகளும் இவர் போட்ட ஊசியினால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணை கட்டி

கண்ணை கட்டி

இதுகுறித்து ஓல்டன்பர்க் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 100 பேர் இறந்துள்ள நிலையில் இதை மருத்துவமனை கண்டுக் கொள்ளாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து நீதிபதி கூறுகையில் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறோம். தற்போது இந்த வழக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கிறது.

வீரியம்

வீரியம்

இருளுக்கு நடுவே வெளிச்சத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் என்றார். இந்நிலையில் ஹோகெல்லிடம் போலீஸார் இன்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் நான்தான் 100 நோயாளிகளையும் கொன்றேன். அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை அதிக வீரியம் கொண்ட ஊசிகளை போட்டு சாவின் விளிம்பு வரை கொண்டு சென்றேன்.

ஊசி போடப்பட்டவர்கள்

ஊசி போடப்பட்டவர்கள்

பின்னர் அவர்களை மீண்டும் பிழைக்க வைத்தேன். என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களை கவர நினைத்ததால் இதுபோல் செய்தேன். எனினும் ஊசி
போடப்பட்டவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்துவிட்டனர்.

English summary
Former male nurse admitted murdering 100 patients as he went on trial in Germany on Tuesday, making him postwar Germany’s most prolific serial killer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X