For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று மாலை கைது செய்யப்படுகிறார் நவாஸ் ஷெரீப்.. பாகிஸ்தானில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைது செய்யப்பட இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று கைது செய்யப்படுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்னும் சற்று நேரத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைது செய்யப்பட இருக்கிறார்.

    லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியதாகவும், வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக அவரது பிரதமர் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தா உச்ச நீதிமன்றத்தால் பறிக்கப்ட்டது.

    Former Pakistan prime minister Nawaz Sharif will be arrested in Pakistan today

    லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியிருப்பதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

    மேலும் 75 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கணக்கில் வராத சொத்துக்களை எல்லா முடக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் இன்று லண்டனில் இருந்து பாகிஸ்தானிற்கு திரும்புகிறார். மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் லண்டனில் தங்கி இருந்தார். இன்னும் சில மணி நேரத்தில் அவர் பாகிஸ்தான் திருப்புவார்.

    லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பும் அவரை தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    Former Pakistan prime minister Nawaz Sharif had a farewell meeting with former finance minister Ishaq Dar in London, before leaving for Abu Dhabi yesterday. Nawaz Sharif & his daughter Maryam will be arrested by a special NAB team at Abu Dhabi Airport later this morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X