For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

வாஷிங்க்டன் : ஒபாமா மகள் மலியா தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை பெரிதுபடுத்தும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ட்வீட் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. இவரது மகள் மலியா ஒபாமா. சமீபத்தில் வெளியான வீடியோ பதிவொன்றில், பொது இடத்தில் வைத்து மலியா விளையாட்டு வீரரும், தனது நண்பருமான ரோரி என்பவரை முத்தமிடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வந்த சில நிமிடத்தில் அமெரிக்கா முழுவதும் வைரல் ஆனது.

 Former and Present American Presidents Daughters Supports Malia Obama on the kissing video

இதுகுறித்து ஊடகங்களில் பல்வேறு விதமாக சித்தரிக்கப்பட்டு செய்திகள் வெளிவந்தன. முன்னாள் அதிபரின் மகள் இப்படியா நடந்து கொள்வது ? ஒபாமாவின் மகளா இப்படி? போன்ற தலைப்புகளில் வந்த செய்திகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் இந்நாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப், மலியாவிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

இவான்கா தனது ட்வீட்டில், மலியாவுக்கும் இளைஞர்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இதை பெரிய தவறாக சித்தரிப்பது சரியான விஷயமாகத் தெரியவில்லை. ஊடகங்கள் தங்களது கருத்தை திருத்திக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோல, முன்னாள் அதிபர் கிளிண்டன் மற்றும் அதிபர் வேட்பாளாராக போட்டியிட்டு ட்ரம்பிடம் தோல்வியடைந்த ஹிலாரியின் மகளுமான செல்சியா கிளிண்டனும் மலியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் பெண்ணிற்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இனிமேலாவது இது போன்ற விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
Former and Present American Presidents Daughters Supports Malia Obama on the kissing video. They Requested that they also have some provate space in their life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X