For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கதேச முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் காலமானார்

Google Oneindia Tamil News

டாக்கா: வங்கதேச முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் உடல்நலக்குறைவால் இன்று காலை டாக்காவில் காலமானார்.

வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் வயது 89. இவர் 1978ம் ஆண்டு வங்கதேச ராணுவ தளபதியாக இருந்தார். இந்நிலையில் 1983ம் ஆண்டு முதல் 1990 வரை அந்நாட்டு அதிபராக இருந்தார். தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் எர்ஷாத் இருந்தார். ஜாதியா கட்சி தலைவராகவும எர்ஷாத் இருந்தார்.

Former president of Bangladesh Hussain Mohammad Ershad dies at 89

டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த ஜுன் 27 ம் தேதி எர்ஷாத் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். கிட்னி மற்றும் குடலின் செயல்பாடு நேற்று சீராக இருந்தது. ஆனால் நேற்று உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வந்தது. இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்கவில்லை.

இதன் காரணமாக இன்று காலை 7.45 மணி அளவில் முன்னாள் அதிபர் எர்ஷாத் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

எர்ஷாத்தின் ஜாதியாக கட்சி கடந்த 2008ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 27இடங்களில் வென்றது. கடந்த 2013 மற்றும் 2018ம் ஆண்டுகளில் வங்கதேச எம்பியாக வெற்றி பெற்றார். கடைசியாக அவர் வங்கதேச எதிர்க்கட்சி தலைவாக இருந்தார்.

English summary
Former president of Bangladesh Hussain Mohammad Ershad dies Military Hospital in Dhaka on Sunday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X