For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்!

By BBC News தமிழ்
|
ஒரே மேடையில் ஐந்து முன்னாள் அதிபர்கள்
Reuters
ஒரே மேடையில் ஐந்து முன்னாள் அதிபர்கள்

இந்த ஆண்டு, அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஐந்து பேர் ஒரே மேடையில் கலந்துகொண்டனர்.

டெக்சஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஹார்வி, இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட தி ஒன் அமெரிக்கன் அப்பீல் என்ற இந்த நிகழ்ச்சி, இதுவரை, 31 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம், ஹார்வி சூறாவளியால் பில்லியன் கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டு, டெக்சஸ் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போதே, இதற்கான முறையீட்டை தலைவர்கள் வைத்தனர்.

லேடி காகா
Reuters
லேடி காகா

தற்போது, புளோரிடா, போர்ட்டோ ரீக்கோ மற்றும் வெர்ஜின் தீவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

"முன்னாள் அதிபர்கள் என்ற முறையில், எங்கள் சக அமெரிக்கர்கள் மீண்டுவர நாங்கள் உதவ வேண்டும் என நினைத்தோம்", என்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதிவு செய்யப்பட்ட செய்தி மூலம், நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு விளக்கினார்.

"மக்கள் இங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். ஒரு டெக்சஸ் வாசியாக கூறுகிறேன். இங்கு தண்ணீரை விட, நிறைய அன்பை டெக்சஸ் வைத்துள்ளது", என்றார் ஜார்ஜ் புஷ்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு, தேசிய கீதத்திற்காக ஐந்து முன்னாள் அதிபர்களும் மேடையில் ஒன்றாக தோன்றினர்.

பின்னர், அமெரிக்கர் என்பதில் பெருமைகொள்வோம் என்ற லீ கிரீண் உட்டின் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பாடகி் லேடி காகாவும் பங்கேற்று பாடினார்.

ஐந்து முன்னாள் அதிபர்கள்
Reuters
ஐந்து முன்னாள் அதிபர்கள்

தற்போதைய அதிபர் டிரம்ப், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் "சிறப்பான பணியைப் பாராட்டியும், தனது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்தும்" அவர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.

கடந்த வாரம், முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றும் புஷ் ஆகியோர் ஆற்றிய உரைகள், தற்போதைய அதிபர் டிரம்ப் மீதான மறைமுக விமர்சனமாகவே பார்க்கப்படுகின்றன.

பிற செய்திகள் :

BBC Tamil
English summary
The five living former US presidents have gathered for a concert in aid of victims of the hurricanes which ravaged the US this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X