For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாச்சு? பரீட்சை எழுதினேன்! தண்ணி அடிச்சேன்! ஓ.. பேனாவை முழுங்கிட்டேனா?

Google Oneindia Tamil News

டெபி: சீனாவில் தேர்வுகள் முடிவடைந்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் பேனாவை முழுங்கியுள்ளார் ஒருவர்.

சீனாவின் டெபி நகரைச் சேர்ந்தவர் ஷிங் சைங் என்ற இளம்பெண்.

20 வயதான இந்த இளம்பெண் கடந்த ஆறு மாதங்களாக கடுமையான வயிற்றுவலியின் காரணமாக துடித்துள்ளார்.

Fountain pen removed from girl’s stomach after being stuck there for six months

வயிற்றுவலிக் கொடுமை:

ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் மருத்துவர்களிடம் சென்றுள்ளார். அவருக்கு மன அழுத்தத்தால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கலாம் என்று அசால்ட்டாக இருந்துவிட்டனர் மருத்துவர்கள்.

எண்டோஸ்கோப்பி:

அதன்பின்னாலும் வயிற்றுவலி கடுமையாகியதால் எண்டோஸ்கோப்பி மூலம் வாய்வழியாக கேமரா குழாயை வயிற்றுக்குள் செலுத்தி சோதனை செய்தனர்.

வயிற்றுக்குள் நீளமான பொருள்:

அச்சோதனையில் மருத்துவர்களே அதிர்ந்து போகும் அளவிற்கு நீளமான பொருள் ஒன்று ஷிங் வயிற்றுக்குள் இருந்துள்ளது தெரியவந்தது.

பேனாவை முழுங்கிய சீனப்பெண்:

இதனால் உடனடியாக எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர் மருத்துவர்கள். அதில் ஷிங் வயிற்றுக்குள் இருப்பது ஒரு பேனா என்பது தெரிய வந்துள்ளது.

தேர்வு முடிந்த சந்தோஷம்:

அதுபற்றி மருத்துவர்கள் விசாரித்தபோது, ஆறு மாதங்களுக்கு முன்பு தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நடந்த விருந்தில் ஷிங் மது அருந்தினேன்.

போதை உச்சிக்கேறிய நிலையில் கையில் இருந்த பேனாவை விழுங்கி விட்டேன் போல என்று கூலாக கூறியுள்ளார்.

வயிற்றில் அறுவைசிகிச்சை:

"பேனாவை விழுங்கியதால் தான் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கவலை வேண்டாம், சின்னதாக ஒரு அறுவை சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறிய மருத்துவர்கள் ஷிங்கின் வயிற்றில் இருந்த பேனாவை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

தப்பிச்சாடா சாமி:

தற்போது வயிற்றுவலி குறைந்து நலமாக இருக்கின்றார் ஷிங்.....நல்ல வேளை போதையில் மது கிளாஸை முழுங்காமல் இருந்தாரே அந்த "பாட்டில்" சாரி... மட்டில் சந்தோஷம்தான்.

English summary
Taiwan doctors experienced quite a shock when they removed a 10cm-long fountain pen from a girl's stomach. It had reportedly been stuck there for half a year!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X