For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடாவில் இரத்தத்தை உறைய வைக்கும் பனி.. உறைந்து மடிந்த பிஞ்சு குழந்தை.. உயிரிழந்தவர்கள் இந்தியர்களா?

Google Oneindia Tamil News

ஒட்டோவா: அமெரிக்கா கனடா எல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கை குழந்தை உள்ளிட்ட 4 பேர் கடும் பனியில் உறைந்து பலியாகி உள்ள நிலையில் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களா என்று அஞ்சப்படும் நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா கனடா எல்லை அருகே தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காரணமாக அங்கு கடும் பனிப்பொழிவு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா கனடா எல்லையில் மானிட்டோபா எமர்சன் அருகே ஒரு ஆண் ஒரு பெண் ஒரு இளைஞர் மற்றும் கைக்குழந்தையின் உடல்கள் பனியில் உறைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

5 வயது குழந்தைகள் இனி மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை.. மத்திய சுகாதாரத்துறை மிக முக்கிய அறிவுரை! 5 வயது குழந்தைகள் இனி மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை.. மத்திய சுகாதாரத்துறை மிக முக்கிய அறிவுரை!

4 இந்தியர்கள்

4 இந்தியர்கள்

இறந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்த குடும்பமாக இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் கனட எல்லையிலிருந்து அவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற போது இந்த விபத்து நேரிட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கன்னட காவல்துறையின் மானிட்டோபா உதவி ஆணையர் ஜோன் மக்லாச்சி, இறந்தவர்கள் இந்தியாவை சேர்ந்த குடும்பமாக இருக்கலாம் என நம்பப்படுவதால் இது இதயத்தை நொருக்கும் துயர சம்பவம் என குறிப்பிட்டார்.

சட்டவிரோத கும்பல்

சட்டவிரோத கும்பல்

உயிரிழந்த குடும்பத்தினர் சட்டவிரோதமாக கனடா எல்லை வழியாக அமெரிக்கா நுழையும் முயற்சியின் போது கடும் பனிப் புயலில் சிக்கி இருக்கலாம் எனவும் கடும் குளிர் மற்றும் கடும் இருளில் சிக்கி மீள முடியாத நிலை ஏற்பட்டு இறந்து இருக்கலாம் எனவும் மக்லாச்சி கூறியுள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த குடும்பம் சட்டவிரோதமாக எல்லையை கடக்க உதவிய குற்றச்சாட்டில் ப்ளோரிடாவில் வசிக்கும் 47 வயதான என்பவர் நேற்று மினசோட்டா வில் கைது செய்யப்பட்ட இவர் மீது மனித கடத்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டுகளை அமெரிக்க அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

அதிகாரிகள் விசாரணை

15 பேரை அமெரிக்க எல்லையில் ஸ்டீவ் ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்த அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த ஆவணங்கள் அற்ற சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என தெரிய வந்துள்ளது எனவும், எல்லைச் சோதனை சாவடி அருகே 5 இந்தியர்கள் அடங்கிய குழுவினர் அதிகாரிகளால் விசாரிக்க பட்டதாகவும் இந்த விசாரணை பதினோரு மணி நேரம் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். யாரோ ஒருவர் தங்களை அழைத்துச் செல்ல உறுதி அளித்ததாகவும் அவர்கள் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி களிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் எச்சரிக்கை

அதிகாரிகள் எச்சரிக்கை

தற்போதைய விசாரணையில் உள்ள நபர்களிடம் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பொம்மைகள் இருந்ததாகவும் அதை நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக எடுத்துச் செல்வதாக கூறியிருந்தனர் இரவு நேர பயணத்தின் போது நான்கு பேர் கொண்ட குடும்பம் தங்களிடம் இருந்து பிரிந்து விட்டது எனவும் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள அவர்கள் அவர்களாக இருக்கலாம் என கூறியுள்ளனர் பணத்துக்காக இதுபோல எல்லைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் கடத்தல்காரர்கள் கூறுவதை நம்ப வேண்டாம் எனவும் இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கனட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
An investigation is underway into the deaths of four people, including a baby, from the same family on the US-Canada border after they were frozen to death in heavy snow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X