For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி.. கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என தகவல்!

நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

காத்மாண்டூ: நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 1300 பக்தர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும் கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது.

Four pilgrims dead in Nepal after severe chillness

பலத்த மழை காரணமாக நேபாளத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

யாத்திரை சென்ற பக்தர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 19 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பலத்த மழையோடு கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. கடுமையான குளிரை தாங்க முடியாமல் 4 பக்தர்கள் பலியாகியுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடுமையான குளிரில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்குமாறு பக்தர்கள் தங்களின் உறவினர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

English summary
Four pilgrims dead in Nepal after severe chillness. Heavy rain in Nepal Pilgrims not able to return country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X