For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க படைகள் மீது ஈரான் மீண்டும் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.. உச்சகட்ட பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க படைகள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்

    பாக்தாத்: பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்திருந்த ஈரான் திடீரென அமெரிக்க படைகள் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அங்கு உச்ச கட்ட பரபப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு கடும் கோபம் அடைந்த ஈரான் , ஈராக்கில் முகாமிட்டுள்ள ஐந்தாயிரம் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் சொன்னது.

    ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்றும் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டது என்றும் அமெரிக்க படை வீரர்கள் யாரும் சாகவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

     இனி எந்த விஐபிக்கும் கருப்பு பூனை படை இல்லை.. மொத்தமாக என்எஸ்ஜி விடுவிப்பு.. மத்திய அரசு அதிரடி இனி எந்த விஐபிக்கும் கருப்பு பூனை படை இல்லை.. மொத்தமாக என்எஸ்ஜி விடுவிப்பு.. மத்திய அரசு அதிரடி

    175 பேர் உயிரிழப்பு

    175 பேர் உயிரிழப்பு

    இந்த சூழ்நிலையில் ஈரானில் இருந்து 175 பயணிகளுடன் சென்ற உக்ரைன் விமானத்தை குறிவைத்து தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.

    ஈரான் தாக்குதல்

    ஈரான் தாக்குதல்

    இந்த சூழலில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்து இருந்தது. போரை விரும்பவில்லை என்று கூறியிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள ஈராக்கில் உள்ள பாலாட் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ராணுவம் ஏழு முறை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 4 வீரர்கள் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

    4 பேர் காயம்

    4 பேர் காயம்

    ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாலாட் ஏர் பேஸின் ஓடுபாதையில் இந்த தாக்குதல் 8முறை நடந்திருப்பதாக ஈராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களை ஈராக்கிய வீரர்கள் என இராணுவ வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன. அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

    வெளியேறியது

    வெளியேறியது

    கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தொடர்ந்து பாக்தாத்தின் வடக்கே அல்-பாலாத் விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையினர் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர் என்று ஈராக் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஈராக் சொல்லவில்லை

    ஈராக் சொல்லவில்லை

    ஈராக் இராணுவ அறிக்கையில் தாக்குதலுக்குப் பின்னால் யார் என்று கூறவில்லை, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

    English summary
    four soldiers were injured after several rockets hit the Balad Air Base in Iraq, which was hosting the United States troops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X