For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூதரக அதிகாரியுடன் கைகுலுக்கவில்லை.. முஸ்லிம் பெண்ணிற்கு மறுக்கப்பட்ட பிரான்ஸ் குடியுரிமை

தூதரக அதிகாரியுடன் கைகுலுக்காத காரணத்தால் அல்ஜீரிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாரிஸ்: தூதரக அதிகாரியுடன் கைகுலுக்காத காரணத்தால் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் முஸ்லீம் என்பதால் கைகுலுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பெண் தன் கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் கடந்த இரண்டு வருடமாக அந்த பெண்ணிற்கு குடியுரிமை வழங்காமல் பிரான்ஸ் தூதரகம் இழுத்தடித்து வருகிறது. அந்த பெண் இதுகுறித்து வழக்கும் தொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்

அந்த பெண்ணிற்கும், பிரான்ஸை சேர்ந்த நபர் ஒருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்து இருக்கிறது. இதையடுத்து அந்த பெண், பிரான்ஸ் நாட்டிற்கு, தன் கணவருடன் குடியேற நினைத்துள்ளார். இதற்காக பிரெஞ்ச் மொழி கற்றுக்கொள்ளுதல், அந்த நாட்டின் சட்டங்களை படித்தல் என்று தீவிரமாக இயங்கி இருக்கிறார்.

மோசமாக மறுக்கப்பட்டது

மோசமாக மறுக்கப்பட்டது

இந்த நிலையில் கடந்த 2016 ஆண்டும் அவர் விண்ணப்பித்த பிரான்ஸ் குடியுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கேள்வி கேட்கும் அதிகாரியை பார்த்தவுடன் அந்த பெண் கைகுலுக்கவில்லை என்று விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் இரண்டு வருடமாக அந்த பெண் குடியுரிமை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

விளக்கம் அளித்தனர்

விளக்கம் அளித்தனர்

இதற்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அந்த பெண் பிரான்சில் வாழ தகுதியற்றவர் என்று கூறியுள்ளது. பிரான்சில், கைகுலுக்குவது மிகவும் சாதாரண முக்கியமாக விதி அதைக்கூட அந்த பெண் செய்யவில்லையே என்றுள்ளனர். மாறாக அந்த பெண், தன்னுடைய மத விதிகளின் படி தெரியாத ஆண்களின் கைகளை குலுக்க கூடாது என்று கூறியுள்ளார்.

கோபப்பட்ட நீதிமன்றம்

கோபப்பட்ட நீதிமன்றம்

இதுகுறித்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், இது மிகவும் மோசமான சம்பவம் என்று கூறியுள்ளது. அந்த பெண்ணிற்கு எதிராக, தூதரகம் விதித்த ஆணையை திரும்ப பெற கூறியுள்ளது. அரசு இதில் விதிகளின் படி செயல்படவில்லை, உடனடியாக, அந்த பெண்ணிற்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

English summary
France embassy denied citizenship for an Algerian Muslim over a handshake issue. She has refused to handshake with embassy officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X