For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோபோ ஸ்டான்ட் அப்.. 16 வயது நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ!

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் எழுந்து நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்த 16 வயது மகனை ரோபோவின் உதவியுடன் தந்தை ஒருவர் எழுந்த நடக்க வைத்த சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜீன் லூயில் கான்ஸ்டான்ஸா. ரோபோட்டிக் என்ஜீனியரான இவருக்கு ஆஸ்கர் கான்ஸ்டான்ஸா என்ற மகன் உள்ளார். இவருக்கு பிறவியிலேயே நரம்பு பகுதியில் குறைப்பாடு இருந்ததால் அவரால் மற்றவரின் உதவி இல்லாமல் எழுந்து நடக்க இயலாது.

தற்போது 16 வயதாகிறது. ஜீன் ஒரு என்ஜினியர். இவரது மகன் யார் உதவியும் இன்றி நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை! கிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை!

பாதம்

பாதம்

இதற்கு ஒரே தீர்வு ரோபோவை உருவாக்குவதுதான் என அவர் நினைத்தார். இதையடுத்து மகன் யார் உதவியும் இன்றி எழுந்து நடக்கும் விதமாக ஒரு ரோபோவை ஜீன் உருவாக்கினார். இந்த ரோபோவை ஆஸ்கரின் தோள்பட்டை, மார்பு, இடுப்பு, முட்டி, கால் பாதம் ஆகியவற்றில் கட்டி விட வேண்டும்.

ஆஸ்கர்

ஆஸ்கர்

இதையடுத்து அந்த ரோபோ ஆஸ்கரின் உடலை அப்படியே தூக்கும். இந்த ரோபோவின் உதவியுடன் சிறிது நேரத்திற்கு அவரால் நடக்க முடியும். இதுகுறித்து ஆக்ஸர் கூறுகையில் இந்த ரோபோவை உருவாக்குவதற்கு முன்னர் நான் வீல் சேரில் பயணித்தேன்.

யாருடைய உதவியாவது

யாருடைய உதவியாவது

இதற்காக எனக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும். ஆனால் இந்த ரோபோவால் என்னால் சுயமாக யாருடைய உதவியும் இன்றி நகர முடியும், நடக்க முடியும். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார். இந்த ரோபோவுக்கு வாய்ஸ் மூலம் கமாண்ட் பாஸ் செய்தால் இது அதன் வேலையை செய்யும். "ரோபோ ஸ்டான்ட் அப்" என்றால் போதும்.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜீனுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து ஜீன் கூறுகையில் அப்பா நீங்கள் ஒரு ரோபோட்டிக் என்ஜீனியர். நான் எழுந்து நடக்க எனக்காக ஒரு ரோபோவை நீங்கள் ஏன் உருவாக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினான் ஆஸ்கர்.

10 வயது முதல்

10 வயது முதல்

இதனால்தான் நான் ரோபோவை உருவாக்கினேன். இதனால் அவரது 10 வயது முதல் தற்போது வரை சக்கர நாற்காலியை ஒரு போதும் சார்ந்திருக்கவில்லை. இதன் விலை 1.76 லட்சம் டாலர்களாகும். நன்றாக நடப்பவர்களுக்கு மூளையிலிருந்து கால்களுக்கு செல்லும் தகவல்கள் இந்த ரோபோவால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கால்களுக்கு தகவல்கள் செல்கின்றன. இதனால் ஆஸ்கரால் சமையல் அறையிலிருந்து ஹாலுக்கு நடக்க முடிகிறது என்றார் ஜீன்.

English summary
France Engineer dad builts a robot for his wheel chair bound 16 years old son to walk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X