For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒல்லிப்பிச்சான் மாடல்களுக்குத் தடை ... இது பிரான்ஸின் புதிய சட்டம்!

Google Oneindia Tamil News

பாரீஸ்: மிகவும் ஒல்லியான பெண்களை மாடல் அழகிகளாக பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்ற பொய் பிரச்சாரத்தை மாடலிங் நிறுவனங்களும், பன்னாட்டு அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களும் செய்து வருகின்றன.

France’s National Assembly wants to ban lean Models

இதற்காக, ஒல்லியான மாடல் அழகிகளை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பலர் உடல் நலத்தை கெடுத்துக்கொள்கிறார்கள்.

அதிகமான அனோரெஸியா:

அதிலும் கலைகளின் தாயகமான பிரான்ஸில் இது மிக அதிகம். பிரான்சில் மட்டும் 40 ஆயிரம் பேர் அனோரெஸியா எனப்படும் ஒழுங்காக சாப்பிடாமல் இருக்கும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதிலும் 10 பேரில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒல்லிகளுக்கு நோ வாய்ப்பு:

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி உடல் நிறை குறியீட்டெண்ணுக்கு குறைவாக உடல் எடை உள்ளவர்களை மாடலாக பயன்படுத்துவது குற்றமாகும்.

ஆறு மாதம் சிறைதண்டனை:

அதையும் மீறி பயன்படுத்தினால் 6 மாத சிறை மற்றும் 85,000 டாலர் அபராதம் விதிக்க முடியும். இதேபோன்று சட்டங்களை இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒல்லியா இருப்பது அழகில்லை:

சமீபத்தில்தான் ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று கூறினால் ஒரு ஆண்டு சிறையும், 10 ஆயிரம் யூரோ அபராதமும் விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

English summary
Slim are they, the models on the Paris catwalks - sometimes too lean. A minimum weight for models to keep young women from anorexia Breaches of the rules could be punished with fines of EUR 75 000 or imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X