For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் பீதி.. கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கும் பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் குட்பை

Google Oneindia Tamil News

பாரீஸ்: கொரோனா வைரஸ் பீதியை அடுத்து பிரான்ஸில் கன்னத்தில் முத்தம் கொடுத்து பாரம்பரியமாக வரவேற்கும் முறைகளுக்கு அந்நாடு குட் பை சொல்லிவிட்டது.

Recommended Video

    Wuhan shake : China people creating new greeting style| தொட்டால் தானே கொரோனா பரவும்... வைரலாகும் Wuhan shake

    சீனாவை பிடித்து உலுக்கி வந்த கொரோனா வைரஸ் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் எப்படியோ 70 நாடுகளுக்கு பரவி விட்டது. அதாவது மொத்தமுள்ள 7 கண்டங்களில் அன்டார்டிகா கண்டத்தை தவிர ஏனைய கண்டங்களில் பரவி விட்டது.

    இது ஒரு உயிர்கொல்லி வைரஸ் என்பதாலும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    கொரோனா எதிரொலி.. ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி.. மக்களுக்கும் அறிவுரை கொரோனா எதிரொலி.. ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி.. மக்களுக்கும் அறிவுரை

    தென்கொரியா

    தென்கொரியா

    சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 80, 270 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இந்த நிலையில் பிரான்ஸில் 224 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சில நாடுகள் பயண தடையையும் விதித்துள்ளன. இந்தியாவும் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. எனினும் மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருவோர் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

    விருந்தினர்

    விருந்தினர்

    மேலும் சில நாடுகளில் விருந்தினர்களை வரவேற்க கட்டி அணைத்தல், கைகுலுக்குதல் உள்ளிட்ட செயல்களை தவிர்த்து விட்டு இரு கைகளையும் கூப்பி நமஸ்தே என வாய் திறந்து அழைக்கின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் நாடும் அங்குள்ள கொரோனா பரவுவதை தடுக்க தங்கள் பாரம்பரிய முறைக்கு குட் பை சொல்லியுள்ளது.

    முத்தமிடுதலுக்கு குட்பை

    முத்தமிடுதலுக்கு குட்பை

    அதாவது அந்த நாட்டில் விருந்தினர்களை வரவேற்கும் பொருட்டு கன்னத்துடன் கன்னம் வைத்து முத்தமிடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த முறையை நிறுத்துமாறு அந்நாட்டு அரசு, தன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னரே மக்கள் இந்த பாரம்பரிய முறைக்கு குட் பை சொல்லிவிட்டனர்.

    English summary
    France says Good bye to kissing cheeks as it is their traditional greetings as Corona virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X